நாசா வான்வெளி உருவகப்படுத்தலுக்கான மேம்பட்ட ஏர் மொபிலிட்டி சேவைக்கு ஜோபி ஏவியேஷன் உடன் இணைந்து எலெக்ட்ரிக் ஏர் டாக்சியை சோதனை செய்கிறது. இந்த வாகனமானது தரையில் இருந்து செங்குத்தாக மேலே சென்று, செங்குத்தாக தரையிறங்கக் கூடியது. கலிபோர்னியாவின் பிக் சுர் அருகே அமைந்துள்ள ஜோபியின் மின்சார விமான தளத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.
நாசா சோதனை செய்யும் eVTOL
eVTOL விமானத்தை நாசா சோதிப்பது இதுவே முதன்முறை ஆகும். ஜோபி ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் eVTOL வெற்றிகரமாக சோதனை செய்யப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் விமானம் நகர்ப்புற பகுதிகளுக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மக்கள் மற்று்ம பொருட்களை நகர்த்துவதற்கான மற்றொரு போக்குவரத்து தளமாக மாறும் என கூறப்படுகிறது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்
இந்த சோதனை தற்போதைய ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விதிமுறைகள் மற்றும் ஏஏஎம் விமானங்களை தேசிய விண்வெளி அமைப்பை இணைக்க உதவுவதற்கான கொள்கையில் இருக்கும் இடைவெளிகளை கண்டறிக்க உதவும் என கூறப்படுகிறது. இந்த சோதனையில் நாசாவின் ஜோபி ஏவியேஷனின் eVTOL விமானத்தில் இருந்து தரவுகளை சேகரிக்கும். இது குறிப்பாக எதிர்காலத்தில் வணிக பயணிகள் சேவையாக பயன்படும். நாசா சேகரிக்கப்படும் தரவின் மூலம் 2022 ஆம் ஆண்டில் சோதனை செய்ய தயாராகும் என கூறப்படுகிறது.
தற்போதைய சோதனையின் மூலம் வாகனம் எப்படி நகர்கிறது, எப்படி ஒலிக்கிறது, எந்த முறையில் கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்கிறது என்ற தகவல்கள் சேகரிக்கப்படும். 2022 ஆம் ஆண்டில் Advanced Air Mobility National Campaign என்ற சோதனை நாசா நடத்த இருக்கும் நிலையில் அதற்கான தரவாக இது சேகரிக்கப்படுகிறது.
eVTOL விமான புரிதல் மிக முக்கியமானது
ஜோபி ஏவியேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜோபென் பெவர்ட் கூறுகையில், நாசாவின் ஏஏஎம் பிரசாரத்தில் eVTOL விமான புரிதல் மிக முக்கியமானது. நாசாவுடன் இணைந்து மின்சார விமானம் சோதனை செய்யப்படும் முதல் நிறுவனமாக ஜோபி ஏவியேஷன் இருப்பதில் பெருமை அடைகிறோம் என கூறினார்.
மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்
அதேபோல் தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.
விண்ணுக்கு சென்ற ராக்கெட்
சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.
மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம்
முதல்முறையாக விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.
செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர்
க்ரூ 1 மிஷன் மூலம் 4 வீரர்களை விண்வெளிக்கு நாசா அனுப்பியுள்ளது. பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பாலகன் 9 ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்ராக்கெட்டின் மூலம் சுற்றுவட்டப்பாதையை அடைந்தனர். மறுபுறம் நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா இல்லை உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக