வடிவேலுவின் வாய்ப்பு வழி தவறி யோகி பாபுவிடம் சென்றது தான் இந்த பேய்மாமா திரைப்படம். இதில் யோகி வடிவேலுக்கு இடத்தை நிரப்பியிருக்கிறாரா என இந்த முழு விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க ..
இயக்குனர்:சக்தி சிதம்பரம்
தயாரிப்பு: ஏலப்பன், விக்னேஷ்
நடிகர், நடிகைகள்,
மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்களம்:
வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான். அவனின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வில்லனுடன் மோதுகிறார். நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமான பேய்மாமா வழக்கமான பேய் படங்களை போன்றே உள்ளதால் பார்ப்பவர்களுக்கு பழைய பிரியாணியை சூடுபண்ணி சாப்பிட்டது போன்ற அனுபவத்தையே கொடுத்துள்ளது.
படத்தின் மைனஸ்:
அரைத்த மாவையே அரைக்கும் கான்செப்ட். குறிப்பாக நித்யானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூப் சேனலை கலாய்ப்பது இதெல்லாம் படத்தின் பலத்தை குறைத்துவிட்டது. கதைக்கு தேவையே இல்லாமல் பல நடிகர் நடிகைகளை இயக்குனர் இறக்கிவிட்டிருக்கிறார்.
படத்தின் பிளஸ்:
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
படத்தின் மதிப்பு:
2/5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக