Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 செப்டம்பர், 2021

பாதுகாப்பு முக்கியம்: ஸ்டிக்கில் வைக்கப்பட்ட சென்சார்- பார்வையற்றவர்களுக்கு தடைகளை எச்சரிக்கை செய்யும்!

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்

கண் பார்வையற்றவர்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கில் ஒயிட் கேன் என்றழைக்கப்படும் ஸ்டிக்கில் பிரான்ஸ் நாட்டு தனியார் நிறுவனம் சென்சார் கருவியை பொருத்தியுள்ளது. இந்த கருவி கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதளவு பயனுள்ள வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவியானது அவர்கள் சாலையை கடக்க பயன்படும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ஒயிட் கேன் என்ற வெள்ளை நிற ஸ்டிக்கில் இந்த சென்சாரை தனியார் நிறுவனம் பொருத்தி உள்ளது. இந்த கருவியானது பிரான்ஸ் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்டிக்கில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவியின் மூலமாக கண் பார்வையற்றவர்கள் இந்த ஸ்டிக்கை பயன்படுத்தி சாலையை கடக்கும் போது இடையூறுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும். திசைக்கு ஏற்றார் போல் அலாரம் எழுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்டிக்கில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் மூலம் காதில் அலாரம் மூலமாக சிக்னல் செய்யப்படும். இதன் மூலம் வழியில் இருக்கும் இடையூறுகளில் இருந்து விலகி செல்லலாம்.

ஸ்டிக் பயன்பாட்டு செயல்முறை

இதுகுறித்த செயல்முறையில் பாரிஸ் நடைபாதையில் இந்த ஸ்டிக் பயன்படுத்தி பெண் ஒருவர் நடந்து சென்ற போது எதிரில் இருந்த குப்பைத் தொட்டியை நெருங்கி சென்ற போது அலாரம் எழுப்பப்பட்டது. காதுகளில் பீப் ஒலிக்கப்பட்டது, தடை குறித்து எச்சரித்த பிறகு அவர் பாதுகாப்பாக நடந்து செல்ல உதவுகிறது எனவும் அவர்களுக்கு என பிரத்யேகமா வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு சாதனம்

பிரான்ஸ் நாட்டு தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தும் பயனரின் பாதையில் இருக்கும் தடையை அவர்களுக்கு அலாரம் மூலம் எச்சரிக்கை ஒலிக்கப்படுகிறது. பயனரின் பாதையில் உள்ள தடையை அவர்களுக்கு எச்சரிக்கை எழுப்புகிறது. சுற்றி இருக்கும் தகவல்களை சேகரிக்க அவர்களை அனுமதிக்கிறது. அதிநவீன சென்சாரை பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் இது கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதளவு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை ஒலி எழுப்பும்

ஜேமட் என்ற பெண் பிறப்பில் இருந்து பார்வையற்றவராக பல ஆண்டுகளாக வெள்ளை நிற குச்சி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு இந்த கருவி பெரிதளவு உதவியாக இருப்பதாகவும் தடைகளை தரை மட்டத்தில் இருந்து ஸ்கேன் செய்து பயணிக்க அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்கேனர் ஆனது அந்தரத்தில் (மேலே) இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பாது. எடுத்துக்காட்டாக சுவற்றில் மாட்டியிருக்கும் போர்ட், ரயில்வே டிராக் கதவு போன்றவைகள் ஆகும்.

ஹெட்ஃபோன்கள் மூலம் எச்சரிக்கை ஒலி

இந்த கருவியின் மூலம் ஹெட்ஃபோன்கள் மூலம் அவருக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சாதனமானது தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை உறுவாக்கிய கோசென்ஸின் இணை நிறுவனர் ஃபிாங்கோயிஸ் பீரோட் தெரிவித்த தகவலின்படி, பயனரின் தகவல் உடன் அவர்களின் பாதை உருவாக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பாதையில் உள்ள தடைகள் குறித்து தெரியப்படுத்த இது உதவும் எனவும் தடைகள் வலது புறமாக இருக்கும்பட்சத்தில் அலாரம் வலது காதில் ஒலிக்கப்படும், அதேபோல் இடது புறமாக இருக்கும்பட்சத்தில் இடது காதில் ஒலிக்கப்படும் என தெரிவித்தார்.

ஒயிட் கேன் என்றழைக்கப்படும் வெள்ளை நிற குச்சி

இந்த சாதனம் பிரான்ஸில் கிட்டத்தட்ட 400 பேரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் இத்தாலி போன்ற சில பகுதிகளில் பயன்பாட்டில் இருப்பதாக குறிப்பிட்டார். இதன் விலை 2000 யூரோக்களாக விற்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். ஒயிட் கேன் என்றழைக்கப்படும் வெள்ளை நிற குச்சியில் இந்த கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவியானது கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதளிவு பயனுள்ள வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக