Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 செப்டம்பர், 2021

தரமான அம்சங்களுடன் புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம்.!

தரமான அம்சங்களுடன் புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம்.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேபோல் இந்த ஆப்பிள் நிகழ்வு அசத்தலான ஒரு பாடல் உடன் துவங்கியது. அதன்பின்பு அந்நிறுவனத்தின் சிஇஓ டிம்குக் இந்த நிகழ்வை தொடங்கி வைத்து பேசினார். பின்பு இந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதாவது இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் பல்வேறு புதிய நிகழ்ச்சிகள் குறித்த முண்ணோட்டம் வெளியிடப்பட்டது. கண்டிப்பாக ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் நாம் எதிர்பார்க்கும் பல புதிய நிகழ்ச்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபேட்

ஆப்பிள் டிவி பிளஸ் சேவை அறிவிப்பை தொடர்ந்து மிகவும் எதிர்பார்கப்பட்ட ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஐபேட் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டேப்லெட்
மாடல்களை விட வேகமாக செயல்படக்கூடியது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

புதிய ஐபேட் மாடல் ஆனது தினசரி பயன்பாடுகளுக்கு தகுந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் முன்பைவிட அதிவேகமாகவும், சிறப்பாக செயல்படுத்தும் திறன் கொண்டுள்ளது இந்த புதிய ஐபேட் மாடல் மேலும் இந்த புதிய ஐபேட் மாடலில் 12எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இந்த செல்பீ கேமரா ஆனது வீடியோகால் மேற்கொள்ளும் போது பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் மாடல் ஆனது சமீபத்திய ட்ரூடோன் அம்சத்தைக் கொண்டுவருகிறது. அதேபோல் இதன் செல்பீ கேமரா சென்டர் ஸ்டேஜ் அம்சத்தை கொண்டுள்ளதால் வீடியோகால் அழைப்புகளுக்கு மிகவும் அருமையாகவே இருக்கும்
என்று கூறலாம். குறிப்பாக புதிய ஐபேட் மாடல் ஆனது 10.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் பேஸ் மாடலின் (64ஜிபி) விலை 329 டாலர்கள் எனத் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபேட் மினி 5ஜி

ஐபேட் மாடலை தொடர்ந்து புதிய ஐபேட் மினி 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 5ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதன்பின்பு ஐபேட் மினி 5ஜி மாடல் ஆனது ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12எம்பி பிரைமரி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் ஐபேட் மினி 5ஜி மாடலில் உள்ள பிராசஸர் ஆனது முந்தைய மாடலை விட 40 சதவிகிதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐபேட் மினி 5ஜி ஆனது 8.3-இன்ச் Liquid Retina டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் ஏ 15 பயோனிக் சிப், யுஎஸ்பி-சி போர்ட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ். டச் ஐடி, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஐபேட் மினி 5ஜி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை 499 டாலர்கள் ஆகும். அதேபோல் அதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 13 மினி சாதனங்கள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன. 

 குறிப்பாக இந்த புதிய ஐபோன் மாடல்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஐபோன் 13, ஐபோன் 13 மினி சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதிய ஐபேட் மாடல்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் இவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிபார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக