Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 செப்டம்பர், 2021

இது கையில் இருந்தா எல்லாமே நம்ம கண்ட்ரோல்: ஆப்பிள் வாட்ச் 7 அறிமுகம்: எல்லாமே உயர்தரம்!

இது கையில் இருந்தா எல்லாமே நம்ம கண்ட்ரோல்: ஆப்பிள் வாட்ச் 7 அறிமுகம்!

ஆப்பிள் ஆறிவித்தப்படி ஆப்பிள் நிகழ்வு இன்று துவங்கியது. இதில் பல்வேறு சாதனங்களை ஆப்பிள் அறிவித்தது. பல்வேறு அம்சங்களுடன் ஆப்பிள் டிவி ப்ளஸ் அப்டேட், ஐபேட், ஆப்பிள் ஐபேட் மினி என பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ். எதிர்பார்த்திராத பல அம்சங்களோடு இந்த சாதனம் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 புதிய அம்சங்களை பெறுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் ஆனது அடுத்த தலைமுறை அம்சத்தோடு புதிய மற்றும் சிறந்த அணுகலோடு வருகிறது. கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் நிகழ்வில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வெளியிட்டுள்ளது மற்றும் புதிய பெரிய வடிவமைப்பு, மெல்லிய உளிச்சாயுமோரம், வேகமான சார்ஜிங், புதிய ரெடினா டிஸ்ப்ளே, சிறந்த ஆயுள் மற்றும் பலவற்றோடு வருகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முழு பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதியோடு வருகிறது. இது வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, இசிஜி வசதியோடு சிறந்த மற்றும் உறுதியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இதன் விலை 399 டாலர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்றே இரண்டு வகைகளில் வருகிறது. 41 மிமீ மற்றும் 45 மிமீ என்ற இரண்டு அளவில் வருகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரு மென்மையான உறை வடிவமைப்பு மற்றும் நல்ல வளைந்த டிஸ்ப்ளேவுடன் புதிய வசதியோடு வருகிறது. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய சார்ந்த சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஸ்மார்ட்வாட்சின் டிஸ்ப்ளேவை சுற்றியுள்ள பெசல்கள் 1.7 மிமீ தடிமன் கொண்டவை ஆக இருக்கும். இது ஆன் ஸ்க்ரீன் பயன்முறையில் 70% பிரகாசத்தை வழங்குகிறது. அதேபோல் ஸ்வைப் வசதியுடன் முழு விசைப்பலகைகளுக்கான ஆதரவை தொடர்பு கொள்ள புதிய வசதிகளை வழங்குகிறது. அதேபோல் மாடுலர் விருப்பத்துடன் பெரிய திரை அணுபவத்தை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இதுவரை கண்டிராத மிகப் பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேபோல் கடிகாரத்தின் வடிவமும் மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பெரிய காட்சிகளுடன் இணைந்து பயன்படுத்தும் வகையிலான பெரிய அளவிலான பட்டன்கள் இடம்பெறுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சில்வர், கிராஃபைட், கோல்ட், டைட்டானியம் மற்றும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக