பல்வேறு மேம்பாட்டு அம்சத்தோடு ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆப்பிள் நிகழ்வு
ஆப்பிள் ஆறிவித்தப்படி ஆப்பிள் நிகழ்வு துவங்கியது. இந்த நிகழ்வில் எதிர்பார்த்தப்படி பல்வேறு சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. பல்வேறு அம்சங்களுடன் ஆப்பிள் டிவி ப்ளஸ் அப்டேட், ஐபேட், ஆப்பிள் ஐபேட் மினி என பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆப்பிள் ஐபோன் 13 தொடர் சாதனம் ஆகும். எதிர்பார்த்திராத பல அம்சங்களோடு இந்த சாதனம் வெளியாகியுள்ளது.
ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்
ஐபோன் 13 தொடரில் ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் ஐபோன் 13 ப்ரோ சாதனம் ரூ.1,19,900 என்ற விலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் மாடலானது ஐபோன் 12 ப்ரோ சாதனத்தைவிட பல மடங்கு மேம்பாடு அம்சத்தை கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முதல்முறையாக 1டிபி சேமிப்பக சாதனம் அறிமுகமாகி இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனங்களானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி உள்ளிட்ட சேமிப்பகத்துடன் வருகிறது.
முதன்மை ஆப்பிள் தொடர்
முதன்மை ஆப்பிள் ஆனது பல புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாட்டு விவரக்குறிப்புகளுடன் வருகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே அமைந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
1டிபி வசதியுடன் ஹை எண்ட் வேரியண்ட்
ஐபோன் 13 ப்ரோ சாதனம் ஆனது 128 ஜிபி உள்சேமிப்பு உடன் ஆரம்ப நிலை சாதனமாக வருகிறது. இந்த சாதனம் ஆனது ரூ.1,19,900 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் இதன் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை ரூ.1,29,900 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் இதன் 512 ஜிபி வேரியண்ட் விலை ஆனது ரூ.1,49,900 ஆக இருக்கிறது. மேலும் ஹை எண்ட் வேரியண்ட் ஆக 1டிபி சாதனம் இருக்கிறது.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை
இந்த சாதனம் ஆனது ரூ.1,69,900 ஆக இருக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வாங்க திட்டமிடும் ப்ரோ வேரியண்ட் விலையை விட ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 1டிபி ஐபோன் 13 ப்ரோ விலை ரூ.1,69,900 ஆக இருக்கும் நிலையில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரூ.1,79,900 ஆக இருக்கிறது.
புதிய சியரா ப்ளூ, சில்வர், கோல்ட், கிராஃபைட்
ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ புதிய சியரா ப்ளூ, சில்வர், கோல்ட், கிராஃபைட் என்ற வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த சாதனத்தின் முன்கூட்டிய ஆர்டர்கள் செப்டம்பர் 17 முதல் தொடங்கும் எனவும் செப்டம்பர் 24 முதல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய மேம்பாட்டு அம்சங்கள்
ஆப்பிள் ஐபோன் 13 மாடல்கள் ஆனது 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட புதிய கேமரா உள்ளிட்ட முக்கிய மேம்பாட்டு அம்சத்தோடு வருகிறது. குறைந்த ஒளியிலும் புகைப்படத்தை பதிவு செய்ய ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் பெரிய சென்சார் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் வருகின்றன. அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் அம்சம் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் புதிய மேக்ரோ பயன்முறையுடன் வருகிறது.
6.1 இன்ச் டிஸ்ப்ளே
ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. புதிய ஏ15 பயோனிக் சிப் வசதியோடு ஐபோன் 13 இயங்குகிறது. 5ஜி ஆதரவோடு இந்த சாதனங்கள் வருகிறது.
கண்ணாடியை விட வலிமையானது
ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் வீடியோக்களை பதிவு செய்ய விரும்பும் பயனர்களுக்கு புதிய சினிமா பயன்முறையை வழங்குகின்றன. அதேபோல் இது டைம் லேப்ஸ் மற்றும் ஸ்லோ மோட் கேமரா பயன்முறையோடு வருகிறது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் வழக்கமான ஸ்மார்ட்போன் கண்ணாடிக்கு பதிலாக செராமிக் ஷீல்ட் உடன் வருகிறது. இது கவர் கண்ணாடியை விட வலிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக