Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

புதுசு கண்ணா புதுசு- இந்தியாவில் Mi-க்கு குட்பை: புது அவதாரம்., இனிமே இப்படிதான்!

சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக சியோமி

சியோமி அதன் ப்ரீமியம் தயாரிப்பு சாதனங்களில் இருக்கும் எம்ஐ-க்கு பதிலாக இனி இந்தியாவில் சியோமி பிராண்ட் அடையாளத்துடன் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக சியோமி

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக இருப்பது சியோமி. இந்திய சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பிரதானமானவை சியோமி. இந்தியாவில் சியோமிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்தியாவில் மட்டுமில்லை அனைத்து நாடுகளிலும் அதன் சந்தை அடிப்படையிலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில்

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் தரம் வாய்ந்த சாதனங்களை அறிமுகம் செய்கிறது. இதன் காரணமாகவே சியோமி நீண்ட காலமாக பிற நிறுவனங்களைவிட தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் சியோமி அதன் சாதனங்களில் இருந்து எம்ஐ பிராண்டிங்கை தவிர்க்கப் போவதாக தெரிவித்துள்ளது.

ரெட்மி, எம்ஐ மற்றும் போக்கோ பிராண்ட்

ரெட்மி, எம்ஐ மற்றும் போக்கோ பிராண்டுகளின் கீழ் சியோமி தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்பின் போக்கோ சுயாதீன பிராண்டாக நிறுவனம் அறிவித்தது. தற்போது சியோமி அதன் சாதனங்களில் எம்ஐ பிராண்டை அகற்றத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சியோமியின் பெரும்பாலான தயாரிப்புகள் எம்ஐ பிராண்டிங் கீழ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல ஸ்மார்ட் டிவிகள், உடற்பயிற்சி பேண்ட்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளும் எம்ஐ பிராண்டிங்கின் கீழ் உள்ளது.

எம்ஐ பிராண்டிங் சாதனங்கள்

எம்ஐ பிராண்டிங் சாதனங்கள் தற்போது சியோமிக்கு மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்ஐ என்ற லோகோ இடம்பெற்ற நிலையில் இனி சியோமி இந்தியா என இடம்பெறும் எனவும் அதற்கான ப்ரீமியம் ரேஞ்ச் தயாரிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட காட்சி அடையாளம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பிராண்ட் இருப்பை ஒருங்கிணைக்கவும் பிராண்ட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைக்கவும் ப்ரீமியம் சாதனங்களில் எம்ஐ என்ற லோகோவிற்கு பதிலாக சியோமி லோகோ இடம்பெறும் என கூறப்படுகிறது.

புதிய பிராண்ட் அடையாள அறிமுகம்

புதிய பிராண்ட் அடையாள அறிமுகமாக இதன் கீழ் இரண்டு தனித்துவ தயாரிப்பு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் கார்பரேட் பிராண்ட் லோகோவாக தொடர்ந்து எம்ஐ இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் தனது கார்ப்பரேட் லோகோவில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. சதுர வடிவ லோகோவின் விளிம்புகளில் வட்டமான மற்றும் மென்மையான வடிவத்தை ஏற்றுக்கொண்டது.

ப்ரீமியம் பிரிவு சாதனங்கள்

ப்ரீமியம் பிரிவுகளின் சாதனங்கள் எம்ஐ என்ற பிராண்ட் லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்டது தற்போது அதற்கு பதிலாக சியோமி லோகோ இடம்பற இருக்கிறது. அதேபோல் ரெட்மி பெயருடன் வரும் சாதனங்கள் அதில் தொடரும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரெட்மி மற்ரும் சியோமி தொடர்களில் சாதனங்கள் வரும்.

சியோமி மிக்ஸ் 4

சியோமி சமீபத்தில் எம்ஐ பிராண்டிங்கை முழுவதுமாக கைவிட முடிவு செய்துள்ளது. இது சியோமி மிக்ஸ் 4 உடன் தொடங்குகிறது. எம்ஐ மிக்ஸ் என்றே அழைக்கப்பட்ட சாதனம் இனி சியோமி மிக்ஸ் என்ற லோகோவுடன் வருகிறது. இந்த சாதனத்தில் எம்ஐ பிராண்டிங் கைவிடப்பட்டதால் இனி வரும் அனைத்து சாதனங்களிலும் எம்ஐ என்ற லோகோவே இடம்பெறும்.

சியோமியின் முதல் ஸ்மார்ட்போன்

இந்த மாற்றமானது மிக்ஸ் 4 சாதனத்துடன் தொடங்குகிறது. சியோமியின் முதல் ஸ்மார்ட்போன் அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் வருகிறது. இந்த தொடரில் முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து சாதனங்களும் எம்ஐ மிக்ஸ் தொடங்கி அனைத்திலும் பெயரிடப்பட்டது. ஆனால் எம்ஐ மிக்ஸ் 4 சாதனத்தில் எம்ஐ என்ற பிராண்டிங் பெயர் கைவிடப்பட்டு மிக்ஸ் 4 என பெயரிடப்பட்டது.

சியோமி தயாரிப்பு போர்ட்ஃபோலியோ

சியோமியின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் எம்ஐ என்ற பெயரை தவிர்க்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எம்ஐ பிராண்டிங் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சியோமி இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. எம்ஐ பிராண்டிங் இல்லாமல் சீனாவில் சியோமி சாதனங்களை விற்பனை செய்வதால், சியோமி பிராண்டிங்கை மிகவும் திறமனையானதாக மாற்றுவதற்காக எம்ஐ பிராண்டிங் படிப்படியாக நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. சியோமியின் துணை பிராண்ட் ஆன ரெட்மியின் கீழ் வெளியிடப்பட்ட சாதனங்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக