
Royal Enfield நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய கஸ்டமைஸ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) டூ வீலர்கள் மட்டுமின்றி அவற்றிற்கு தேவையான சில முக்கிய பொருட்களையும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் ரைடர்களுக்கு தேவையான அணிகலன் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றது.
தலைக் கவசம், டீ சர்ட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட பலவற்றை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், ரைடர்கள் தங்களுக்கான ரைடிங் ஜாக்கெட்டை தாங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை ராயல் என்பீல்டு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஆகையால், தங்களுக்கான ரைடிங் ஜாக்கெட் என்ன ஸ்டைலில், என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் தாங்களே தேர்வு செய்து அதை பெற்றுக் கொள்ள முடியும். மழை காலத்திலும் பயன்படக் கூடிய லைனர்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல், அதேபோல் பனி காலத்திலும் உதவக் கூடிய வகையிலான மாற்றங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளை இதன் வாயிலாக ராயல் என்பீல்டு வழங்குகின்றது.
மேக் இட் யூர்ஸ் (Make It Yours) எனும் திட்டத்தின் வாயிலாக ரைடிங் ஜாக்கெட்டை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை ராயல் என்பீல்டு அறிமகம் செய்திருக்கின்றது. இருசக்கர வாகனங்களைப் போலவே தனது ரைடிங் கியர்களின் பக்கம் மக்களைக் கவரும் நோக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த திட்டத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
ரைடிங் ஜாக்கெட் ரைடர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க உதவுகின்றன. அதனை அவர்களின் விருப்பத்திற்கே வழங்கவும் இத்திட்டத்தை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனடிப்படையில், வாடிக்கையாளர்கள் தங்களின் மார்பக, தோள்பட்டை மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் என்ன மாதிரியான துணிகள் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.
கூடுதலாக க்னாக்ஸ் மற்றும் டி30 ஆர்மோர் தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த தேர்வை ராயல் என்பீல்டு வழங்குகின்றது. இது எதிர்பாரா அசம்பாவிதங்களின் அதிகளவில் பாதுகாப்பை வழங்க உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரைடிங் ஜாக்கெட் கஸ்டமைசேஷனை பெறுவது எப்படி?, இணையம் வாயிலாக அல்லது ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனையாளர்கள் வாயிலாக நமக்கான ஜாக்கெட்டை நாமே கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். ரைடிங் ஜாக்கெட்டைத் தொடர்ந்து பைக் தயாரிப்பாளர் ஹெல்மெட் மற்றும் டி சர்ட் உள்ளிட்டவற்றிற்கும் கஸ்டமைஸ் செய்யும் வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் டெலிவரி பணிகளைத் தொடங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 1ம் தேதி புதிய தலைமுறை கிளாசிக் 350 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 3ம் தேதி இப்பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கின.
பழைய தலைமுறையைக் காட்டிலும் லேசான கவர்ச்சி அம்சங்கள் சேர்ப்புடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் குறித்த தகவலை தரும் நேவிகேஷன் வசதி, ப்யூவல் கேஜ், நடுத்தர டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் அலாய் வீல் தேர்வு உள்ளிட்ட வசதிகள் புதிய தலைமுறை கிளாசிக் 350 இல் வழங்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து, ப்ளூடூத் இணைப்பு, யுஎஸ்பி சார்ஜர், வட்ட வடிவ பின் பக்க இருக்கை, 14 லிட்டர் கொள்ளளவு உள்ள எரிபொருள் நிரப்பும் தொட்டி ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி புதிய வகையிலான நிற தேர்வுகளையும் ராயல் என்பீல்டு இப்பைக் வழங்கியிருக்கின்றது. புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 1.84 லட்சம் ஆகும்.
இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 2.15 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். 349சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் எஞ்ஜினே புதிய தலைமுறை கிளாசிக் 350 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 20 எச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜினில் புதிய வகை ஷாப்ட் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக