எனவே இப்போது ஆண்ட்ராய்டு உற்பத்தியாளர்கள் அந்தந்த ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின்களை வருகையை டீஸ் செய்ய ஆரம்பித்தன. குறிப்பாக இந்த புதிய இயங்குதளத்தைபயன்படுத்தும் பயனர்கள் புதுவிதமான டிசைனில் கூகுள் வொர்க்ஸ்பேஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த பிப்ரவரி மாதம் இதன் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு மொத்தம் ஐந்து பீட்டா வெர்ஷன்களை வெள்ளோட்டம் பார்த்த கூகுள் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் புதிய ஸ்டைலில் ஹோம் ஸ்க்ரீன் விட்ஜெட்டும் கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
மேலும் கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, Monet என்ற அம்சத்தின் மூலம்வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வால்பேப்பர்களை அடிப்படையாக கொண்டு அதன் கலருக்கு தகுந்தது போல தானியங்கு முறையில் தீம்கள் மற்றும் சிஸ்டம் மெனுக்களுக்கு வண்ணம் கொடுத்துக் கொள்ளுமாம் இந்த இயங்குதளம். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கூகுள் பிக்சல் போன் வாடிக்கையாளர்கள் இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்திற்கு தங்கள் போனை அப்டேட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்வு செய்ய்பட்ட நோக்கியா, ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு சில நாட்களுக்குப் பிறகு புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இப்போது அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
பிக்சல் 3 எக்ஸ்எல்
பிக்சல் 3ஏ
பிக்சல் 3ஏ எக்ஸ்எல்
பிக்சல் 4
பிக்சல் 4 எக்ஸ்எல்
பிக்சல் 4ஏ
பிக்சல் 4ஏ (5ஜி)
பிக்சல் 5
பிக்சல் 5ஏ
அல்ட்ரா 5ஜி
எஸ்20 அல்ட்ரா
எஸ்20 பிளஸ் 5ஜி
எஸ்20 பிளஸ்
எஸ்20 5ஜி
எஸ்20
எஸ்10 5ஜி
எஸ்10 பிளஸ்
எஸ்10இ
எஸ்10 லைட்
நோட்20 அல்ட்ரா 5ஜி
நோட்20 அல்ட்ரா
நோட்20 5ஜி
நோட்10 பிளஸ் 5ஜி
நோட்10 பிளஸ்
நோட்10 5ஜி
நோட்10 லைட்
சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் சீரிஸ்
இசட் ஃபோல்ட்2 5ஜி
இசட் ஃபோல்ட்2
இசட் பிளிப் 5ஜி
இசட் பிளிப்
நோக்கியா எக்ஸ்ஆர் 20
எம்ஐ 11
எம்ஐ 11 அல்ட்ரா
எம்ஐ 11 ஐ
எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ
ஒன்பிளஸ் 9
ஒன்பிளஸ் 9 ப்ரோ
ஒன்பிளஸ் நோர்ட் 2
மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்
மோட்டோரோலா எட்ஜ் 20
மோட்டோரோலா ஜி 60
மோட்டோரோலா ஜி 40 ஃப்யூஷன்
மோட்டோரோலா ஜி 30
அசுஸ் ஜென்ஃபோன் 8
அசுஸ் ஜென்ஃபோன் ஃபிளிப்
ரியல்மி 8 எஸ் 5 ஜி
விவோ வி 21 5 ஜி
விவோ வி 60 ப்ரோ
விவோ வி 50 சீரிஸ்
விவோ வி 20
iQOO 7 லெஜண்ட்
iQOO 7
iQoo Z3
போகோ எஃப் 3 ஜிடி
போகோ எக்ஸ் 3 ப்ரோ
மோட்டோ ஜி 5 ஜி
மோட்டோ ரேஸர் 5 ஜி
ரியல்மி ஜிடி
ரியல்மி ஜிடி மாஸ்டர் பதிப்பு
ரியல்மி 8ஐ
குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்க வாய்ப்பு உள்ளது என republicworld வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக