Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 அக்டோபர், 2021

ஆன்லைன் ரேசன் கார்டு விண்ணப்பத்தில் இருந்த சிக்கல் நீக்கம்: இனி எளிதாக இதை செய்யலாம்!

 இனி ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படாது
புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பரிந்துரைகள் பல்வேறு காரணங்களால் ஆன்லைனில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்துடன் ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டும். தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in என்ற உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தை அணுக வேண்டும்.
 
உணவு வழங்கல் துறை அதிகாரி

உணவு வழங்கல் துறை அதிகாரிகள், பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்கு வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். பல்வேறு ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே நிராகரிக்கப்பட்டு வருகின்றன. ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் போது ஏணையமுறை ரத்து செய்யப்படுகிறது. இதற்கான காரணங்களும் பலரால் முழுமையாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் அது ரத்து ஆவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இனி ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படாது

அதாவது இதுவரை ரேசன் கார்டுகள் ஆவணங்கள் சரியாக இல்லாத பட்சத்தில் ரத்து செய்யப்பட்டு வந்தது. தற்போதைய புது அம்சத்தின் மூலம் இனி ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படாது. இணையதளத்தில் மறுபரிசீலனை என்ற வசதி தொடங்கப்பட்டிருக்கிறது. எதன் காரணமாக எந்த ஆவணம் தேவை என விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அனுப்பப்படும். விண்ணப்பம் செய்யும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மறுபரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் பதிவிட வேண்டும். அதில் அனுப்பப்படும் ஒருமுறை குறியீட்டுச் சொல்லை பதிவிட வேண்டும். அதில் காட்டப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பல்வேறு தேவைகளுக்கு குடும்ப அட்டை

பல்வேறு தேவைகளுக்கும் குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) என்பது முக்கிய ஆவணங்களில் பிரதான ஒன்று. அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்ட்கள் மூலம் ரேஷன் பொருட்கள் உட்பட அரசு திட்ட நன்மைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக மணமுடித்த தம்பதிகளுக்கான குடும்ப உறுப்பினர்கள் அட்டை, அவர்களது பெயர்கள் நீக்குவது, புதிய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயர் சேர்ப்பது உட்பட பல்வேறு தேவை ஏற்படும்.

புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிபப்பது எப்படி

அதேபோல் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்காதவர்கள் வரும் காலக்கட்டத்தில் அரசு வழங்கும் சலுகை வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிபப்பது கட்டாயமாகும். அதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மின்னணு அட்டை சேவை என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

தகவலை சரியாக பதிவிட வேண்டும்

புதிய விண்ணப்பம் என்பதை தேர்வு செய்தவுடன் அதில் குடும்ப உறுப்பினர் தலைவர் பெயர் என்ற பாக்ஸ் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் தங்களது பெயரை பிழையின்றி பதிவிட வேண்டும். பின் அதில் காட்டப்படும் முகவரி, மாவட்டம், கிராமம், தாலுகா, அஞ்சல் குறியீடு, மொபைல் எண் உள்ளிட்ட தகவலை சரியாக பதிவிட வேண்டும். இந்த தகவல் அனைத்தையும் பிழையின்றி சரியாக பதிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சேமிப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்

எந்தவகை அட்டை என்பதை தேர்வு செய்து உறுப்பினர் சேர்க்கைகளை பதிவிட வேண்டும். அதன்பின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும், சேமிப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆவணம் இருந்தால் அப்லோட் செய்யவும் இல்லையென்றால் பிறப்பு சான்றிதழ் போதுமானது. இந்த விண்ணப்பம் அனைத்தும் சமர்பிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் குறிப்பு எண் குறித்து வைத்துக் கொள்ளவும். இதன்பின் ஆதார்கார்ட், போட்டோ உள்ளிட்ட சான்றிதழ்களை தாலுகா அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். பிறகு ஆவண சரிபார்ப்பில் தொடங்கி துறை வாரியாக அதிகாரி ஒப்புதல் வழங்கப்படும். இதன்பின் தங்களகுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக