இந்தியாவில் பண்டிகை கால சிறப்பு விற்பனை கடந்த வருடத்தை விடவும் மிக பெரியதாக வெடித்துள்ள நிலையில், யார் அதிகமாக சலுகை அளிப்பது என்பதில் அனைத்து துறையிலும் அதிகப்படியான போட்டி உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சியோமி இந்தியாவில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
2020ல் இந்திய அரசு சீன செயலிகளை தடை செய்த போது சியோமி நிறுவனத்தின் மீது கடுமையான வெறுப்பை வெளிப்படுத்திய நிலையில், சீனாவின் சியோமி நிறுவனம் தனது MI பிராண்டை மேட் இன் இந்தியா என மாற்றியது யாராலும் மறக்க முடியாது. ஆனால் இன்று விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது சியோமி.
தசரா பண்டிகை விற்பனை நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து துறைகளிலும் துவங்கியுள்ள நிலையில் சியோமி கடந்த 5 நாளில் மட்டும் சுமார் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் அதாவது 20000 ரூபாய்க்கும் அதிக மதிப்புடை ஸ்மார்ட்போன்களை ப்ரீமியம் போன்கள் என ஸ்மார்ட்போன் சந்தையில் அழைக்கப்படுகிறது. இப்பிரிவு விற்பனையில் சியோமி இந்த பண்டிகை கால விற்பனையில் 10 மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த பண்டிகை கால விற்பனையில் சியோமி ஆன்லைன், ஆப்லைன் என அனைத்து பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன் மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
மேலும் இந்த 5 நாள் பண்டிகை விற்பனையில் சியோமி 11 லைட் என்ஈ 5ஜி, MI 11எக்ஸ் சீரிஸ் போன்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து டெர்மி நோட் 10எஸ், ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி 9 சீரிஸ் போன்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சிப் தட்டுப்பாட்டு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி குறைந்திருந்தாலும், பண்டிகை காலம் என்பதால் அதிகளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. சியோமி மட்டும் அல்லாமல் பிளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக