Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 அக்டோபர், 2021

பேஸ்புக், வாட்ஸ்அப் முடங்கியதற்கு என்ன காரணம்..? மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு $7 பில்லியன் நஷ்டம்..!

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்

இன்றைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறியுள்ள பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு சுமார் 6 மணிநேரம் இயங்கவில்லை, இதனால் பல டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சரி வர இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

 குறிப்பாக அமெரிக்காவில் பகல் நேரத்தில் இந்தச் செயலிகள் முடங்கியது. இதனால் பேஸ்புக் பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர் கொண்டது.

மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் சுமார் 7 பில்லியன் டாலர் வரையிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்

6 மணிநேரம் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில் மொத்த நிர்வாகம் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்வதற்கான பணியில் ஈடுபட்ட நிலையில் பெரும் போராட்டத்திற்குப் பின்பு 3 செயலிகளும் இயல்பான முறையில் இயங்க துவங்கியது. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் 3.5 பில்லியன் மக்கள் இச்சேவையைப் பயன்படுத்த முடியாமல் போனது.

கான்பிகிரேஷன் மாற்றம்

இந்தப் பிரச்சனைக்குத் தவறான கான்பிகிரேஷன் மாற்றம் தான் காரணம் எனப் பேஸ்புக் தனது இணையதளப் பிளாக் போஸ்ட்-ல் விவரித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் கம்யூனிகேஷன் டூல் முடங்கிய காரணத்தால் வாடிக்கையாளர்களைத் தனது தளத்திற்குள் இணைக்கும் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

பேஸ்புக் விளக்கம்

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணிநேரம் முடங்கியதற்குத் தவறான கான்பிகிரேஷன் மாற்றம் தான் அடிப்படை காரணம் எனப் பேஸ்புக் விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் எந்தப் பிரிவு இதற்குக் காரணம், யார் காரணம் போன்ற விஷயங்களைப் பேஸ்புக் வெளியிடவில்லை.

பேஸ்புக் அடுத்தடுத்துப் பிரச்சனை

கடந்த ஒரு வருடத்தில் பேஸ்புக் அதிகப்படியான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்கள் பேஸ்புக் தளத்தில் அதிகமாக இருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது.

குழந்தைகளுக்குப் பாதிப்பு

இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குழந்தைகளுக்கான செயலிகள் எந்தக் காரணத்திலும் அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க நீதிமன்றத்தில் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் வழக்குத் தொடுத்தது.

6 மணிநேரம் முடக்கம்

தற்போது பேஸ்புக் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்திற்குக் கீழ் இருக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய 3 செயலிகளின் சேவைகள் 6 மணிநேரம் முடக்கியுள்ளது. இது வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் சந்தையிலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 6 மணிநேர பாதிப்பிற்கு மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் பதிவு மூலம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

4.9 சதவீதம் வரை சரிவு

நேற்று ஒரு நாளில் மட்டும் பேஸ்புக் பங்குகள் 4.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் இருந்து பேஸ்புக் பங்குகள் சுமார் 15 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு

இதன் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராகக் குறைந்து பில் கேட்ஸ் முன்னேறி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் மற்றும் டிக்டாக்

சர்வதேச சமுக வலைத்தளத்தில் மிக முக்கியமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய 3 செயலிகளும் முடங்கிய காரணத்தால் நேற்று டிவிட்டர் மற்றும் டிக்டாக் செயலிகளில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக