கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SREI குரூப் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிலான கடன் சுமையை உருவாக்கியுள்ள காரணத்தால், இவ்வங்கிக்கு கடன் கொடுத்த பிற வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி வசூலிக்க முற்பட்டபோது, SREI குரூப் நிர்வாகம் ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.
SREI குரூப்-ல் ஏற்பட்டு உள்ள நிர்வாகப் பிரச்சனை மற்றும் வாராக் கடன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதோடு SREI குரூப்-ஐ திவாலாக (bankruptcy) அறிவிக்கும் பணிகளைச் செய்யவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
SREI குரூப்-ன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ள காரணத்தால், பாங்க் ஆப் பரோடாவின் முன்னாள் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான ராஜ்னீஷ் சர்மாவை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளது.
SREI இன்பராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் SREI எக்யூப்மென்ட் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்குக் கடன் அளித்தவர்களுக்கும், தனது கடன் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவில் நிலுவைத் தொகை வைத்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்கு அதிகமாகக் கடன் அளித்துள்ளது UCO வங்கி தான். யூகோ வங்கி மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான கடனை செலுத்த வேண்டும், இதேபோல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான கடனை தொடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது SREI குரூப்-யிடம் இருந்து நிலுவை தொகையை வசூலிப்பதில் யூகோ வங்கி தலைமையிலான குழு பணியாற்றி வருகிறது. மேலும் SREI குரூப் நிறுவனங்கள் அதிகளவிலான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ஜூன் காலாண்டில் மட்டும் SREI இன்பரா நிறுவனம் சுமார் 971 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த வருடத்தில் இதன் அளவு வெறும் 67 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SREI குரூப் NBFC இந்தக் கொரோனா காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்த காரணத்தால் கடும் நிதி நெருக்கடி உருவானது. இதனால் பல உயர் அதிகாரிகள் வெளியேறிய காரணத்தால் நிர்வாகம் சீர்குலைந்தது. மேலும் நிதிநிலையை மேம்படுத்த உயர் அதிகாரிகளுக்கு வருடம் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் என அறிவிக்கப்பட்டது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் SREI இன்பராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 1.78 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 8.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக