இந்த கோவில் எங்கு உள்ளது?
தூத்துக்குடி மாவட்டம், திருப்புளியங்குடி எனும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?
வரகுணமங்கையிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 32 கி.மீ தொலைவிலும் உள்ளது. நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பேருந்தில் சென்று தரிசிக்கலாம்.
இந்த கோவிலின் சிறப்புகள் என்ன?
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83வது திவ்ய தேசம்.
நவ திருப்பதிகளில் இது 4வது திருப்பதி (திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம் ஆகும்.
இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக அருள்பாலிக்கிறார். மரக்காலை தலையின் அடியில் வைத்து சயனத்தில் உள்ளார்.
இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது.
வேறென்ன சிறப்பு?
இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம்.
வருணன், நிருதி, தர்மராஜன், நரர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த தலம்.
புதனால் ஏற்படும் தோஷங்கள் விலக இத்தலத்தில் வந்து வேண்டினால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
இத்தலத்தில் புதன் கிரகத்துக்கு என்று தனி சன்னதி கிடையாது. பெருமாளே புதன் கிரகமாக அருள்பாலிக்கிறார். எனவே புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலக பெருமாளை வணங்கி தோஷ நிவர்த்தி பெறுகின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக