செவ்வாய், 12 அக்டோபர், 2021

யாராக இருந்தாலும் கடன் வாங்கித்தான் ஆகணும்... சிரிக்க மட்டுமே - ரிலாக்ஸ் ப்ளீஸ்....!!

---------------------------------------------------------------
இன்றைய சரவெடிகள்....!!
---------------------------------------------------------------

ராமு : அத்திவரதரை தரிசனம் பண்ணிட்டு கோவிலை விட்டு வெளியே வரும் போது என் பொண்டாட்டிய காணோம்...
சோமு : அப்புறம்?
ராமு : அத்திவரதரோட மகிமையே மகிமை-ன்னு வீட்டுக்கு வந்துட்டேன்...
சோமு : 😝😝
---------------------------------------------------------------
மாலா : நேத்து எங்க வீட்டுக்கு திருட வந்த திருடன் என்னை சேர்ல வெச்சு கட்டிட்டான்...
விமலா : உன் புருஷன் என்ன பண்ணினாரு?
மாலா : சந்தோஷத்துல அவனுக்கு ஆப்பிள் ஜுஸ் போட்டுக் கொடுத்தாரு.....
விமலா : 😫😫
---------------------------------------------------------------
படியுங்கள்.... சிந்தியுங்கள்..!!
---------------------------------------------------------------
🙋 பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும்.

🙋 போலியான நண்பனாக இருப்பதை விட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்.
---------------------------------------------------------------
யோசித்து பார்த்து சிரிக்கலாமா?
---------------------------------------------------------------
😜 பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகணும்.

😜 பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது இதுதான் உலகம்.

😜 என்னதான் மனுஷனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்து தான் ஆகணும் இதுதான் வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்