செவ்வாய், 12 அக்டோபர், 2021

மழை வெளுத்து வாங்கினாலும் கவலைப்பட தேவையில்ல... கார் பாத்திரமா இருக்கும்! ஐந்து முக்கிய டிப்ஸ்கள்!

மழை வெளுத்து வாங்கினாலும் கவலைப்பட தேவையில்ல... கார் பாத்திரமா இருக்கும்! ஐந்து முக்கிய டிப்ஸ்கள்!மழை காலத்தில் காரை பாதுகாப்பானதாகவும், எந்த நேரத்திலும் பயன்படக்கூடியதாகவும் மாற்றக் கூடிய ஐந்து முக்கிய டிப்ஸ்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மழைக் காலம் தொடங்கிவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்போதே அடை மழை புரட்டிப் போட தொடங்கியிருக்கின்றது. இரவு படுக்க செல்லும் முன் இன்று மழை வருவது சந்தேகம்தான் என நினைத்து, நாம் படுக்க சென்றிருந்தால், மறு நாள் காலையில் சாலையையே அடித்து செல்லுகின்ற வகையில் மழை பொழிந்திருக்கும். நாம் எதிர்பார்க்கவே இல்லாத நேரங்களில் இதுபோன்று மழை பொழிந்து மறு நாள் பிளானை குழப்பிவிடும்.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து, அதாவது, அடை மழையில் இருந்து நமது பிரியமான வாகனங்களை எப்படி பாதுகாப்பது மற்றும் மழை காலத்தில் நமது பயணத்தை எப்படி சுவாரஷ்யமானதாக மாற்றுவது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஐந்து முக்கிய குறிப்புகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பாதுகாப்பு கவர் (Car Body Cover):

தொடர் மழை காரின் உதிரிபாகம் மற்றும் முக்கிய கூறுகளை பதம் பார்த்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக மழையில் வாகனத்தை நனைய விடும்போது நமக்கே தெரியாமல் சில பாகங்கள் மழை நீருக்கு இரையாகும். ஆகையால், மழையில் வாகனத்தை பாதுகாக்க முறையில் நிறுத்துவது மிக சிறந்தது. பார்க்கிங் அல்லது படத்தில் இருப்பதைப் போல பாதுகாப்பான போர்வைகளைக் கொண்டு காரை மூடி வைப்பது மிகவும் நல்லது.

இது மழை நீருக்கு உதிரிபாகங்கள் இரையாவதைத் தவிர்க்க உதவும். குறிப்பாக, வாகனத்தின் புதுபொலிவை தக்க வைக்கவும் இது உதவும். இந்த கவர் மழை காலத்தில் மட்டுமின்றி அதிக வெயில் காலத்திலும் வாகனங்களைப் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் யுவி கதிர்களில் இருந்து காரின் நிறம் மற்றும் புதுத் தன்மையைப் பாதுகாக்க உதவும். எனவே முழுமையாக மூடக் கூடிய கவர்களை மழை மற்றும் வெயில் காலங்களில் பயன்படுத்துவது அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.

காற்று வடிகட்டி (air purifier):

மழைக் காலங்களில் அடைக்கப்பட்ட அறைகளில் இருந்து ஓர் விதமான துர்நாற்றம் வருவது பொதுவான ஒன்று. ஈரபதத்தினால் இதுமாதிரியான துர்நாற்றங்கள் வீசக்கூடும். இதுமாதிரியான துர்நாற்றங்கள் கார்களில் சில நேரங்களில் வரக் கூடும். அவற்றை வெளியேற்ற காற்று வடிகட்டிகள் பயன்படுகின்றன. காருக்குள் இருக்கும் காற்றை வடிகட்டவும் அவை உதவுகின்றன.

மேலும், இது கண்ணுக்கே தெரியாத பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கவும் செய்கின்றன. ஆகையால், காருக்குள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க காற்று வடிகட்டியை பயன்டுத்துவது அவசியமானதாக பார்க்கப்படுகின்றது. ஹெப்பா ஃபில்டர் மணற்றும் ஆக்டிவேட்டட் கார்பன் ஆகிய வசதிகளில் காற்று வடிகட்டிகள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை பிஎம்2.5 நுண்ணிய துகள்கள், பேக்டீரியா, தூசி, புகை, துர்நாற்றம் ஆகியவற்றை எல்லாம் அழிக்கும் தன்மைக் கொண்டது.

ஆன்டி ஃபாக் மெம்ப்ரேன் (Anti Fog Membrane):

இது பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளை, இன்னும் தெளிவான பார்வை திறனை வழங்கும் வகையில் மாற்றக் கூடிய ஓர் அம்சமாகும். கண்ணாடிகளில் விழும் மழை துளிகள் புள்ளி புள்ளியாக தேங்கி நின்று பின் பக்கத்தை பார்ப்பதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

ஆனால், இந்த ஆன்டி ஃபாக் மெம்ப்ரோன் தன்மீது விழும் மழை துளி மற்றும் பனி துளி ஆகியவற்றை வழுக்கி ஓட செய்யும். ஆகையால், தெளிவான பார்வை என்பது உறுதி. இதனை கண்ணாடியில் ஒட்டுவது மிகவும் சுலபம். மழைக் காலங்களில் இது மிகப் பெரிய உதவியாக அமையும். பின்னால் வரும் வாகனங்களை மிகவும் தெளிவாகக் காண இது உதவும்.

மழை நீரை விரட்டும் வேக்ஸ் (Rain repellent wax):

வைப்பர் இல்லாமல் விண்ட்ஸ்கிரீன் மீது விழும் மழை நீரை அகற்ற முடியுமா என கேட்டால் 'பிரத்யேக வேக்ஸ்' செயலின் வாயிலாக முடியும் என்பதே எங்களின் பதில் ஆகும். தாமரை இலை மீது விழும் நீர் துளியைப் போல் இந்த வேக்ஸ் உடனடியாக வழுக்கி ஓட செய்யும். வாட்டர் ரெசிஸ்டன்ட் லேயரைப் போல் இது செயல்படும். ஆகையால், மழை காலத்தில் இந்த வேக்ஸை விண்ட்ஸ்கிரீன் மீது பயன்படுத்துவது மிக சிறந்தது. இதன் வாயிலாக தெளிவான பார்வையை பெற முடியும். பிற வாகனங்களில் இருந்து வெளிப்படும் இடையூறுகளை தவிர்க்கவும் இது உதவும்.

ஃப்ளூர் மேட் (Floor mat)

மழைக் காலத்திற்கு ஏற்ற ஃப்ளூர் மேட்கள் தற்போது சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அவை, காரின் உட்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவும். முழுமையாக நனைந்த படி நாம் உள் நுழையும்போது நம் மீதிருந்து வழியும் நீரை உறிஞ்சும் கொள்ளும் வசதிக் கொண்ட மேட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பன்முக பயன்பாடு கொண்ட ஃப்ளூர் மேட்களை மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்