Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 அக்டோபர், 2021

சீனா, பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா: புரட்டிப்போடும் எனர்ஜி பிரச்சனை.. என்ன நடக்குது..?!

பிரிட்டன் பெட்ரோல் தட்டுப்பாடு

கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் உலகின் முன்னணி நாடுகளில் அடுத்தடுத்து மின்சாரம், எரிபொருள் என எனர்ஜி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சீனா, பிரிட்டன் உட்பட அனைத்து முன்னணி நாடுகளும் மொத்தமாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. எப்படி என்ன பிரச்சனை..? வல்லரசு நாடுகளுக்கு ஏன் இந்த நிலைமை..? இப்போ இந்தியாவுக்கு என்ன நிலை..?

சீனா மின்சார தட்டுப்பாடு

வல்லரசு நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வரும் சீனாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாகச் சீனாவின் மேற்கு பகுதியில் பல லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் மற்றும் நெருப்பு மூட்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தொழிற்சாலை மூடல்

இது மட்டும் அல்லாமல் சீனாவில் பல தொழிற்சாலைகளில் மின்சார பற்றாக்குறை காரணமாக வென்டிலேட்டர் இயங்காத காரணத்தால் ஊழியர்கள் கார்பன் மோனோஆக்சைட் வாயு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு அடிப்பட்டு, அடுத்தடுத்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது.

பிரிட்டன் பெட்ரோல் தட்டுப்பாடு

இதேபோல் வல்லரசு நாடுகள் பட்டியலில் முன்னணி நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் டிரக் மற்றும் டிரக் டிரைவர் பற்றாக்குறை காரணமாக சப்ளை செயின் பாதிக்கப்பட்டு 90 சதவீத பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் முழுமையாகத் தீர்ந்துள்ளது.

நுகர்வோர் சந்தை

இதனால் உணவு பொருட்கள் முதல் அனைத்து முக்கியமான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது, ஒருப்புறம் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் மறுபுறம் மக்கள் பதற்றத்தின் காரணமாக இருப்பில் இருக்கும் பொருட்களை அளவுக்கு அதிகமாக வாங்கி வருகின்றனர். இதனால் மொத்த பிரிட்டனும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

ஐரோப்பா

இதேபோல் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக நாடான ஜெர்மனியில் ஆட்சி மாற்றத்தை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

அமெரிக்கா

மேலும் அமெரிக்காவில் எரிவாயு மற்றும் நிலக்கரி உற்பத்தியாளர்கள் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது குளிர் மற்றும் பனிக் காலம் துவங்கியுள்ள வேளையில் heating தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் அமெரிக்கா தவித்து வருகிறது.

கொரோனா காரணமா..?

கொரோனாவும் ஒரு காரணம் என்பது தான் இதற்கு பதில்.. இந்த எனர்ஜி பிரச்சனை-க்கு பல காரணங்கள் உண்டு. கொரோனா தொற்று காலத்தில் பெரிய அளவிலான உற்பத்தி தேவை மற்றும் சரக்கு போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேக்சின் அளிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஓரே இடத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பும் காரணத்தால் சப்ளை டிமாண்ட், சரக்கு போக்குவரத்து பிரச்சனை, மின்சார எரிபொருள் பிரச்சனை உருவாகியுள்ளது.

பொதுவாக இருப்பு அளவு என்பது வர்த்தகம் பொருத்து இரண்டு நாள் முதல் 2 வாரங்கள் வரையில் இருக்கும், ஆனால் மக்கள் அனைவரிடத்திலும் டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த இருப்பு அளவு சில மணிநேரம் முதல் சில நாட்களாகக் குறைந்துள்ளது.

கிரீன் எனர்ஜி என்ன ஆச்சு..?!

கடந்த 5 முதல் 10 வருடமாக உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழ்நிலை பாதிப்பு காரணமாக புதை படிவ எரிபொருள்கள் (Fossil Fuel) அதிகளவில் கைவிட்டுப் புதுப்பிக்கப்பட்ட எனர்ஜி (renewable energy) பிரிவில் அதிகம் முதலீடு செய்யத் துவங்கியது.

இந்த மாற்றத்தின் காரணமாக

இந்த மாற்றத்தின் காரணமாக புதை படிவ எரிபொருள்கள் உற்பத்தியை மேம்படுத்தவும், புதிய தளத்திற்கான விரிவாக்கமும் செய்யப்படவில்லை. இதனால் தேவை அதிகரித்துள்ள இன்றைய அளவிற்குப் புதுப்பிக்கப்பட்ட எனர்ஜி உற்பத்தி போதுமானதாக இல்லை, இதேபோல் புதை படிவ எரிபொருள்கள் மூலம் செய்யப்படும் எனர்ஜி உற்பத்தியையும் தடாலடியாக உயர்த்த முடியவில்லை.

இதனால் எனர்ஜி பிரிவில் டிரெட்லாக் ஆகியுள்ளது. புதை படிவ எரிபொருள்கள் பிரிவில் எரிவாயு, நிலக்கரி, எண்ணெய், உலோகங்கள், சுரங்கம் ஆகியவை வரும்.

புதை படிவ எரிபொருள்கள்

தற்போதைய குளோபல் எனர்ஜி பிரச்சனை புதை படிவ எரிபொருள்கள் உற்பத்தியில் அதிகம் முதலீடு செய்ய வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது..? ஆனால் இதற்கான பதிலை தற்போது கூற முடியாது..

ஆனால் OPEC அமைப்பு புதை படிவ எரிபொருள்கள் உற்பத்தியில் முதலீட்டைக் குறைத்திருப்பது தவறான செயல். உலகம் முழுவதும் கிரீன் எனர்ஜி உற்பத்தி துவங்கிய பின்பும் அடுத்த சில வருடத்திற்குக் கச்சா எண்ணெய் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக OPEC அமைப்பு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 80 டாலர் அளவில் உயர்ந்துள்ளது.

நிலக்கரி மற்றும் எரிவாயு

ஐரோப்பாவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் தண்ணீர் விநியோகத்தில் ஏற்பட்டு உள்ள தட்டுப்பாடு அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. நிலக்கரி விலை அதிகமாகியுள்ள காரணத்தால் சீனாவும் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்கத் தயங்கி வருகிறது.

சீனா

சீனா, உலக நாடுகள் பயன்படுத்தும் மொத்த நிலக்கரி அளவீட்டை விடவும் அதிகமாக நிலக்கரி பயன்படுத்துகிறது. ஆனால் சீனா பெரும் பகுதி நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காரணத்தால் அதிக விலை கொடுத்து வாங்க தயங்குகிறது. அதேபோல் நிலக்கரி சப்ளையிலும் தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தால் சீனாவில் தற்போது மின்சார தட்டுப்பாடு நிலவி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.

சீனா மாட்டிக்கொண்டது

சீனாவில் நிலவும் மின்சார பிரச்சனை காரணமாக அந்நாட்டு உற்பத்தித் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, அதேபோல் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகமாகும் காரணத்தால் ஏற்றுமதி பொருட்களின் விலையை உயர்த்தவும் முடியாது.

ஏற்கனவே சீனா இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளில் அதிகளவிலான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது விலையை உயர்த்தினால் வர்த்தகத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மின்சார தட்டுப்பாடு காரணமாகப் பல சீன மின்சார நிறுவனங்களும், உற்பத்தி நிறுவனங்களும் முடங்கியுள்ளது.

விலை அதிகம்

எனர்ஜி பற்றாக்குறை காரணமாக மின்சாரம், எரிபொருள் உற்பத்தி மற்றும் நிறுவனங்களுக்கு லாபம் அதிகம் தான், ஆனால் நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இது பெரும் தலைவலி. இதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு யாருக்கெல்லாம் லாபம், யாருக்கெல்லாம் கஷ்டம் என்பது தான் மொத்த உலக நாடுகளுக்கும்.

பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிடிவாதம் பிடித்து பிரிட்டன் வெளியேறிய பின்பு, தனது குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கியது, குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு வருவோர் மீது குறிவைத்து சட்ட விதிகளைக் கடுமையாக்கியது.

இதனால் ஐரோப்பிய நாட்டு மக்கள் பிரிட்டனுக்கு விசா இல்லாமல் வர முடியாது. இதனால் பல லட்சம் லாரி டிரைவர்கள் பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.

இதன் வாயிலாக தற்போது பிரிட்டன் நாட்டில் பெட்ரோல் முதல் உணவுப் பொருட்கள் வரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு கொண்டு சேர்க்க முடியாத அளவிற்கு டிரக் மற்றும் டிரக் டிரைவர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

போரிஸ் ஜான்சன்

டிரக் மற்றும் டிரக் டிரைவர் பற்றாக்குறை காரணமாகவே தற்போது பிரிட்டன் நுகர்வோர் பொருட்கள் தட்டுப்பாடு மூலம் முடங்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்த நிலையை சமாளிக்க 10000 வெளிநாட்டு டிரைவர்களுக்கு தற்காலிக விசா அளிக்கப்பட உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிருஸ்துமஸ் பண்டிகைக்குள் சப்ளை செயின் பிரச்சனையை அந்நாட்டில் தீர்க்கப்பட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது பிரிட்டன் அரசு.

அமெரிக்கா

அமெரிக்காவில் பனிக் காலம் துவங்கியுள்ள நிலையில் கட்டாயம் அடுத்த சில வாரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிவாயு தடைப்பட்டு பெரும் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே எண்ணெய் உற்பத்தித் துறையில் ஊழியர்களை பணியில் அமர்த்துவது அமெரிக்காவில் பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில் இந்த பனிக் காலம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்க உள்ளது.

என்ன தான் முடிவு..?

தற்போது அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் எனர்ஜி பிரச்சனை இருக்கும் காரணத்தால் நீண்ட கால அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட எனர்ஜி (renewable energy) பிரிவில் அதிகளவில் முதலீடு செய்யப்படும் என்பது உறுதி.

இதேவேளையில் உற்பத்தி பொருட்கள், எனர்ஜி விலை பெரிய அளவில் உயரும் சாமானிய மக்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும். மேலும் இந்த சப்ளை டிமாண்ட் பிரச்சனை என்பது அடுத்த சில காலாண்டுகளுக்குக் கட்டாயம் இருக்கும்.

இதேபோல் புதை படிவ எரிபொருள்கள் (Fossil Fuel) உற்பத்தியை அதிகரிக்கத் தற்காலிகமாக முடிவு எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக