Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 அக்டோபர், 2021

ஸ்டோரேஜுக்கு இனி ஹார்ட் டிரைவ் தேவையில்லை.. DNA சேவை போதும்.. எதிர்காலத்தின் மிரட்டலான கண்டுபிடிப்பு

எதிர்பார்ப்பதை விட மிக வேகமாக விசித்திரமாக வளரும் தொழில்நுட்பம்

ஹார்ட் டிரைவ்களுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது, இனி நீங்கள் உங்கள் தகவலை ஸ்டோரேஜ் செய்துகொள்ள ஹார்ட் டிரைவுகளை நம்பி இருக்க வேண்டியது இல்லை. காரணம், SSD ஹார்ட் டிரைவ் சாதனங்களை விட அதிவேகமாக ஸ்டோரேஜ் வசதியை விரிவுபடுத்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் DNA அடிப்படையிலான சேமிப்பகத்தை உருவாக்குகிறது. எது டிஎன்ஏ அடிப்படையிலான ஸ்டோரேஜ் அம்சமா? என்னப்பா சொல்றீங்க, இது எதோ ஹாலிவுட் பட தோரணையில் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதுவே உண்மை.

எதிர்பார்ப்பதை விட மிக வேகமாக விசித்திரமாக வளரும் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் நாம் எதிர்பார்ப்பதை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பறக்கும் கார் உருவாக்குவது, செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டுவது, மரணம் இல்லாத அழியா வாழ்க்கையின் வாசலைத் திறப்பது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த டைனோசர் மற்றும் மாமோத் யானைகளை மீண்டும் உயிர்ப்பிப்பது போன்ற பல நம்ப முடியாத அதிநவீன ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அப்படியான ஒரு ஆராய்ச்சியின் விளைவு தான் இந்த DNA ஸ்டோரேஜ் பயன்பாடு. எதிர்காலத்தின் ஸ்டோரேஜ் டிவைஸ்களாக இவை மாறப்போகிறது.

ஹார்ட் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்னல் USB சாதனங்களுக்கு குட்பை சொல்லப் போகிறோமா?

ஹார்ட் டிரைவ்கள் மற்றும் எக்ஸ்டர்னல் USB போன்ற உங்களின் வழக்கமான ஸ்டோரேஜ் முறைகள் மற்றும் சாதனங்களால் சலிப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம் மக்களே, நாம் அனைவரும் டிஎன்ஏ அடிப்படையிலான டேட்டா ஸ்டோரேஜ் சேமிப்பிற்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. செயற்கை டிஎன்ஏவைப் பயன்படுத்தி உங்களின் தரவு சேமிப்பக தளத்தை உருவாக்கி கற்பனை செய்ய முடியாத வேகத்துடன் விரைவில் பாதுகாப்பான டேட்டா ஸ்டோரேஜ் பயன்பாட்டைப் பயன்படுத்தப் போகிறோம்.

கேடலாக் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கும் DNA ஸ்டோரேஜ் சேவை

பாஸ்டனில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. "கேடலாக் (Catalog)" என்ற நிறுவனம் பெயரில் தொடங்கப்பட்ட இந்த புதிய சேவை, உங்களை DNA மூலம் இனி டேட்டா ஸ்டோரேஜ் செய்ய அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. ஹ்யுன்ஜுன் பார்க் இணைந்து நிறுவிய, கேடலாக் டிஎன்ஏ-அடிப்படையிலான சேமிப்பு முறைகளை உருவாக்க இந்நிறுவனம் முயல்கிறது. இது ஆற்றலைச் சேமிக்கிறது, நியாயமான விலையில், செயற்கை டிஎன்ஏவைப் பயன்படுத்தித் தரவைச் சேமிக்க மிகவும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது.

வழக்கமான ஸ்டோரேஜ் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பென் டிரைவ்கள் மற்றும் ஹார்ட் டிரைவ்கள் போன்ற வழக்கமான சேமிப்பு முறைகள் தரவைச் செயலாக்க அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றன மற்றும் குறைந்த சேமிப்பு இடத்தின் காரணமாகப் பாதுகாப்பு சிக்கல்களுக்கும் பாதிக்கப்படுகிறது. இதற்கான தீர்வாக, செயற்கை டிஎன்ஏ அடிப்படையிலான சேமிப்பு மற்றும் கணக்கீட்டுக் கருவிகளை உருவாக்க 35 மில்லியன் டாலர் தொடர் பி சுற்று நிதியைப் பெற்றுள்ளதாக கேடலாக் அறிவித்துள்ளது.

நிதி என்பது டிஎன்ஏ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நல்ல செய்தியா?

ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளரான ஹாங்காங்கின் லி கா-ஷிங்கின் ஹொரைசன் வென்ச்சர்ஸின் உதவியுடன், தொடர் பி நிதியுதவி தென் கொரியாவைச் சேர்ந்த ஹன்வா இம்பாக்ட் தலைமையிலானது என்று கேடலாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹியுன்ஜுன் பார்க் டெக் க்ரஞ்சிற்கு தெரிவித்துள்ளார். தற்போதைய சுற்று நிதியுதவி தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை மேம்படுத்தப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான டேட்டா மேலாண்மைக்கு இந்த DNA சேவை கைகொடுக்குமா?

தரவு மேலாண்மை, தரவின் கணக்கீடு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றையும் இந்த மேடை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. டெக் க்ரஞ்ச் மதிப்பீட்டின்படி, இந்த சுற்று நிதி மூலம், நிறுவனம் 60 மில்லியன் டாலர்களை திரட்ட முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில், ஹாரிஸன்ஸ் வென்ச்சர்ஸ் தலைமையிலான தொடர் A சுற்றின் ஒரு பகுதியாக 10 மில்லியன் டாலர் திரட்டப்பட்டது. அதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் சீட் ரவுண்ட் மூலம் 9 மில்லியன் டாலர் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷானான் என்ற செயற்கை DNA ஸ்டோரேஜ் என்ன செய்யும் தெரியுமா?

இந்த டிஎன்ஏ சேமிப்பு ஒன்றும் ஒரு புதிதான யோசனை அல்ல. உண்மையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே சில ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில வருடங்களாக இதைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. கேடலாக் நிறுவனம் "ஷானான் (Shannon)" என்ற தனிப்பயன் டிஎன்ஏ ரைட்டரை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளது. இது ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான இரசாயன எதிர்வினைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

என்ன வேகத்தில் இந்த புதிய DNA ஸ்டோரேஜ் சேவை செயல்படுகிறது?

புதிய DNA ஷானான் அதன் முழு திறனில், வினாடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் தரவை ரைட் செய்யக்கூடியது என்று கேடலாக் நிறுவனம் கூறியுள்ளது. தொழில்நுட்பம் விரைவில் வணிக ரீதியாகக் கிடைக்கும் என்பது உறுதியாகத் தோன்றவில்லை. இருப்பினும் தொடக்கத்தில், டிஎன்ஏ தரவு சேமிப்பு குறிப்பாகப் பொருளாதாரத் துறையில் மோசடிகளைக் கண்டறியவும் மற்றும் புகைப்படங்களைச் செயலாக்கும்போது குறைபாடுகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

DNA ஸ்டோரேஜ் பற்றி உங்களின் கருத்து என்ன?

இந்த புதிய DNA முறையிலான தரவு சேமிப்பு மற்றும் கணக்கீட்டின் தடைகளை உடைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி, ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்ஸ் போன்ற தகவல்களுக்கு எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். கூடுதல் தகவல்களுக்கு எங்களின் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக