வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்து பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏர்டெல் அல்லது ரிலையன்ஸ் ஜியோ உட்பட மற்ற நிறுவனங்கள் மலிவு விலையில் போனஸ் டேட்டா நன்மையை வழங்குவதில்லை. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் மலிவு விலை திட்டகளில் கூட போனஸ் டேட்டா நன்மை உட்பட பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இப்போது வெளிவந்த தகவலின்டி, வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி போனஸ் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த போனஸ் டேட்டா நன்மை பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல்
பயனர்கள் இந்த 2ஜிபி போனஸ் பெற வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம்
அல்லது நிறுவனத்தின்மொபைல் ஆப் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே
கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் தரப்பு
இணையதளம்
அல்லது அப்ளிகேஷனில் இருந்து ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு எந்த போனஸ்
டேட்டா நன்மையும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியாவின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், உள்ளிட்ட
நன்மைகள்
கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 1ஜிபி அளவிலான
டேட்டா நன்மையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன்
ஐடியாவின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
எனவே 2ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவையும் சேர்த்தால் இந்த திட்டத்தில்
மொத்தமாக 30ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வி மூவிஸ் & டிவி ஆப் வழியாக பயனர்கள் லைவ் டிவி, செய்திகள், திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்ஸ்களை ஸ்ட்ரீம் செய்ய அனுமதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக