
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இறங்கினால் வெற்றி பெற முடியாது என நம்பியிருந்த வேளையில், நிறுவனத்தை நடத்த வெறும் 6 மாதம் மட்டுமே பணம் இருந்த காரணத்தால் எப்படியாவது நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என நோக்கத்தில் ரிஸ்க் எடுத்து மும்பை பங்குச்சந்தையில் இறங்கி வெற்றிபெற்றது சோமேட்டோ.
சோமேட்டோ கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இறங்கிய நிலையில், நைகா, பாலிசிபஜார் ஆகியவை வெற்றிபெற்றது. ஆனால் மிகப்பெரிய முதலீட்டுத் தொகை ஈர்க்கும் திட்டத்துடன் இறங்கிய பேடிஎம் பெரும் தோல்வியைச் சந்தித்து.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட்ட பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டு 2,150 ரூபாய் பங்கு விலையில் சுமார் 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்தது. பேடிஎம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளிலேயே ஐபிஓ விலையில் இருந்து சுமார் 27.25 சதவீதம் சரிந்து 1564.15 ரூபாய்க்குச் சரிந்தது. இது பட்டியலிடப்பட்ட 9 சதவீத டிஸ்கவுன்ட் விலையை விடவும் 19.99 சதவீதம் குறைவாகும்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேடிஎம் ஐபிஓ தோல்வி அடைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. பேடிஎம் ஐபிஓ மூலம் அதன் ரீடைல் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் சேர்த்து சுமார் 38,000 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
டாப் 10 நிறுவனங்கள்இதேபோல் இந்திய சந்தையில் கடந்த 15 வருடத்தில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட டாப் 10 நிறுவனங்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். இந்தப் பட்டியலில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்த நிறுவனங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம்.
கபே காஃபி டே : 328 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 17.64 சதவீதம் சரிந்து 270.15 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 1,150 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 36.45 ரூபாய்
ரிலையன்ஸ் பவர் : 450 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 17.22 சதவீதம் சரிந்து 372.50 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 10,123.20 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 13.52 ரூபாய்
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் : 520 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 14.41 சதவீதம் சரிந்து 445.05 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 3,480.12 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 791.60 ரூபாய்
கெய்ரன் இந்தியா : 160 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 14.06 சதவீதம் சரிந்து 137.50 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 5,788.79 கோடி ரூபாய்.
யூடிஐ அசர்ட் மேனேஜ்மென்ட் : 554 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 13.97 சதவீதம் சரிந்து 476.60 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 2,159.88 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 1043.45 ரூபாய்
கல்யான் ஜூவல்லர்ஸ் : 87 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 13.45 சதவீதம் சரிந்து 75.30 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 1,174.82 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 72.85 ரூபாய்
இன்டஸ் டவர்ஸ் : 220.00 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 13.09 சதவீதம் சரிந்து 191.20 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 4,172.76 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 284.40 ரூபாய்
ரத்தன்இந்தியா பவர் : 45 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 12.78 சதவீதம் சரிந்து 39.25 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 1,758.15 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 3.86 ரூபாய்
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் : 334 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 10.88 சதவீதம் சரிந்து 297.65 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 6,056.79 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 639 ரூபாய்
ஜேபீ இன்பராடெக்ஜேபீ இன்பராடெக் : 102 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ வெளியிட்டு முதல் நாளே 10.49 சதவீதம் சரிந்து 91.30 ரூபாய் அளவில் பங்கு விலை சரிந்தது. மொத்த ஐபிஓ மதிப்பு 2,257.61 கோடி ரூபாய்.
இன்றைய பங்கு விலை - 1.96 ரூபாய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக