
சமீபத்தில் ஜல்சக்தி அமைச்சகம் ஆற்றில் படகு ஒன்று செல்வது போன்ற மிகவும் அசத்தலான ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அதாவது இந்திய அரசின் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தன்னுடைய ட்விடடர் பக்கத்தில் ஆற்றில் ஒரு படகு மிதப்பதுபோல புகைப்படத்தை வெளியிட்டது. தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அந்த புகைப்படத்தில் இருக்கும் படகு பார்ப்பதற்கு ஒரு அழகிய ஓவியம் போல் இருக்கிறது. சிலர் இந்த படத்தைஃபோட்டோஷாப் என்று கூட சொல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த ஆற்றுநீர் வானத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.
ட்விட்டர் பக்கத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட அந்த படம் மேகாலயா மாநிலத்தில் ஓடும் உம்காட் ஆறு. இந்த ஆற்றில் தான் அந்தப் படகு செல்கிறது. அதாவது தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு உலகிலேயே சுத்தமான ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தீவுகளில் இருக்கும் கடலில் தரை தெரிவது போன்று அந்த ஆற்றின் அடியில்உள்ள தாவரங்கள், கற்கள் போன்றவை கண்ணாடி மூலம் பார்ப்பது போல மிகவும் தெளிவாக தெரிகின்றன.
அதேபோல் இந்த ஆற்றை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு நன்றி எனவும், நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளும் இதுபோன்றே சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் எனவும், மேகாலயா மக்களுக்கு தலை வணங்குகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக தொழிற்சாலை கழிவுகள், நெகிழிக் கழிவுகள், கால்நடைப் பண்ணைகளில் இருந்து உருவாகும் கழிவுகள் இத்தகைய மாசுகளில் இருந்து நதிநீரை காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தண்ணீரும் காற்றும் சுத்தமாக இருப்பதற்கான கொள்ளை முடிவுகளை எடுக்க வேண்டியதும், அவற்றை கண்டிப்புடன் செயல்படுத்துவதும் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்ய வேண்டிய தலையாயகடமைகளாகும்.
தற்போது மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது. குறிப்பாக 22 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் லைக் செய்துள்ளனர். பின்பு 3 ஆயிரம் பேர் இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித வாழக்கைக்கு தூய்மையான குடிநீர் முக்கியமானது. எனவே அனைத்து ஆறுகள், ஏரி, குளம் போன்றவற்றை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் நல்லது. அதேபோல் ஆறுகள் என்பது இயற்கையாக உருவான ஒரு நீரோடை ஆகும். பொதுவாக ஆறுகள் மலைப் பிரதேசங்களில் இருந்து உருவாகிறது. குளிர்பிரதேசங்களில் காணப்படும் மலைப்பகுதிகளில் உள்ள பனிக் கட்டிகள் உருகுவதால்,தண்ணீரானது தாழ்வான பகுதிகள் நோக்கி செல்லும். எனவே இதுபோன்ற ஆறுகளை தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக