Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 நவம்பர், 2021

2ஆக உடையும் ஜான்சன் & ஜான்சன், 3ஆக உடையும் தோஷிபா.. என்ன நடக்குது..!!

   ஜான்சன் & ஜான்சன்

சமீபத்தில் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், வலிமைப்படுத்தவும் மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்ட நிலையில், இன்று அமெரிக்காவின் மற்றொரு பழம்பெரும் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தனது நுகர்வோர் வர்த்தகத்தை இரண்டாக உடைக்க முடிவு செய்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தைப் போல ஜப்பான் நாட்டின் தோஷிபா-வும் தனது நிறுவனத்தை 3 நிறுவனங்களாக உடைக்க முடிவு செய்துள்ளது. இப்படி அடுத்தடுத்து பெறு நிறுவனங்கள் அனைத்தும் பல நிறுவனங்களாக உடைக்க என்ன காரணம்..?
 
ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது நுகர்வோர் வர்த்தகப் பிரிவில் இருந்து பார்மா மற்றும் மருந்துக் கருவிகள் வர்த்தகத்தைத் தனியாக இரு நிறுவனங்களாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனம் சிறிய பிரிவுகளாக உடைக்கப்படும் போது அதிகளவில் கவனத்தைக் குறிப்பிட்ட வர்த்தகத்தில் செலுத்திச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வலிமையாக்க முடியும்.

2 வருடம்

ஜான்சன் & ஜான்சன் இந்த நிறுவன பிரித்தல் பணிகளை அடுத்த 2 வருடத்தில் முடிக்க உள்ளது. இதேபோல் இரண்டு நிறுவன தயாரிப்புகளும், சேவைகளும் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் பெயரிலேயே தொடரும்.

 புதிய பெயர்

மேலும் ஜான்சன் & ஜான்சன் தனியாகப் பிரிக்கும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமும் பங்குச்சந்தை பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும், அதற்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ஜான்சன் & ஜான்சன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் பவுடர்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் மற்றும் இதர பல தயாரிப்புகள் மீது இருக்கும் 1000த்திற்கும் அதிகமான வழக்குகள் மூலம் மொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே தற்போது நிறுவனத்தைத் தனியாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

75 சதவீத வர்த்தகம்

2020ல் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் பார்மா பிரிவு மட்டும் சுமார் 45.57 பில்லியன் டாலர் அளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மொத்த 82.58 பில்லியன் டாலர் விற்பனை அளவீட்டில் சுமார் 75 சதவீதம் வர்த்தகம் புதிதாக பிரிக்கப்படும் நிறுவனத்தில் இருக்கப் போகிறது. அதாவது கன்ஸ்யூமர் ஹெல்த் ஒரு நிறுவனமாகவும், மருத்துவ உபகரணம் மற்றும் பார்மா ஆகிய இரு பிரிவையும் சேர்த்து ஒரு நிறுவனமாகப் பிரிக்கப்படுகிறது.

தோஷிபா திடீர் முடிவு

ஜப்பான் தோஷிபா நிறுவனத்தில் பல வருடங்களாக நிர்வாக அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனையைத் தீர்க்கும் வண்ணம் 3 தனித்தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பையும் ஜான்சன் & ஜான்சன் அறிவித்த போது தான் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக