ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ 2வது காலாண்டில் லாபத்தில் சரிவு என்பதைத் தாண்டி நஷ்டத்தில் 87 சதவீதம் அதிகரித்துள்ளது.
சோமேட்டோ நிறுவனம் கடந்த ஆண்டுச் செப்டம்பர் காலாண்டில் 230 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 430 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 87 சதவீதம் அதிகமாகவும், கடந்த காலாண்டை விட 21 சதவீத அதிகமாகவும் உள்ளது.
வருமானம்
ஆனால் இந்தச் செப்டம்பர் காலாண்டில் 104 சதவீத வளர்ச்சியில் 1,024 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று அசத்தியுள்ளது சோமேட்டோ. இந்தியாவின் பெரு நகரங்களில் சிறப்பாக இயங்கி வரும் நிலையில் சிறு நகரங்களிலும், புதிய இடங்களிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது. இதனால் நஷ்டத்தின் அளவும் அதிகரித்துள்ளது.
தீபிந்தர் கோயல்
இதேவேளையில் சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபிந்தர் கோயல் அடுத்த இரண்டு வருடத்தில் நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
4 நிறுவன தேர்வு
கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 275 மில்லியன் டாலர் அளவிலான தொகையை 4 நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
மேஜிக்பின், கியூர்பிட்
தற்போது சோமேட்டோ நிறுவனத்தின் திட்டத்தின் படி ஷப்ராக்கெட் என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 8 சதவீத பங்குகளுக்கு 185 மில்லியன் டாலரும், மேக்ஜிக்பின் நிறுவனத்தில் 50 மில்லியன் டாலரும், கியூட்பிட் நிறுவனத்தில் இரண்டு பகுதியாக 100 மில்லியன் டாலர் தொகையை 6.4 சதவீத பங்குகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
சோமேட்டோ பங்குகள்
இதன் வாயிலாக நஷ்டத்தின் அளவு அதிகரித்த நிலையிலும், சோமேட்டோ பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து தற்போது 0.37 சதவீத வளர்ச்சி உடன் சோமேட்டோ பங்குகள் 136.50 ரூபாயாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக