வாங்க தூண்டு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மிக அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட பேட்டரி உடன் ஓர் இ-ஆட்டோ உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மின்சார ஆட்டோ பற்றிய முக்கிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இது குறித்த கூடுதல் முக்கிய தகவல்களைக் கீழே பார்க்கலாம்.
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஒமெகா செய்கி மொபிலிட்டி (Omega Seiki Mobility), லாக் 9 மெட்டீரியல்ஸ் (Log 9 Materials) எனப்படும் பேட்டரி உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து புதுமுக மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது. ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி (Rage+ Rapid EV) எனும் வாகனத்தையே அது உருவாக்கியுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் பிற எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனை இந்த எலெக்ட்ரிக் வாகனம் கொண்டிருக்கின்றது. இதுவே இதன் சிறப்பு வசதி ஆகும். இதற்காக இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பத்தை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.
பன்முக தேர்வில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். திறந்த உடல்வாகு, மூடப்பட்ட உடல் தோற்றம் என பல நிலைகளில் ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி விற்பனைக்குக் கிடைக்கும். இவையனைத்திற்குமே தற்போது புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றது. புக்கிங் பணிகள் கடந்த 10ம் தேதியில் இருந்தே நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.
இந்த வாகனத்தை முதலில் புக் செய்யும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் வாகனம் விற்பனைக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்தது. தள்ளுபடியின் கீழ் ரூ. 3.59 லட்சம் தொடங்கி ரூ. 3.99 லட்சம் வரையிலான விலையில் ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது.
அறிமுகமாக ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. இவற்றிற்கான புக்கிங்குகள் நிறைவுற்ற பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆவணம் சரிபார்த்தல், கட்டணம் வசூலித்தல் மற்றும் டெலிவரிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புக்கி செய்த நாளில் இருந்து 4 முதல் 6 வாரங்களுக்குள் உரிய வாகனத்தை உரிய வாடிக்கையாளர்களிடத்தில் டெலிவரி கொடுக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய தொழில்நுட்பமாகக 35 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியே இந்த ஆட்டோக்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அதீத ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் தனிநபர் மின் வாகன பயன்பாட்டாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது விற்பனையில் பெரும்பாலான தயாரிப்புகள் முழுமையாக சார்ஜடைய பல மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் நிலையில், புதிய ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி மிக குறுகிய நேரத்தில் (35 நிமிடங்களில்) சார்ஜாகிவிடும் என்பது மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
40 ஆயிரம் முறை பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் ஆயுட்காலம் 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். நகர்ப்புற வர்த்தக பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெலிவரி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் பை-பேக் (buy back) குராண்டியை நிறுவனம் ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி-க்கு வழங்க இருக்கின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு இ-வாகனத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். தொடர்ந்து, மறு விற்பனையில் நல்ல மதிப்பைப் பெறவும் இது உதவும்.
ரேஜ்-ப்ளஸ் ரேபிட் இவி மின்சார ஆட்டோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான பாகங்கள் இந்திய தயாரிப்பு பாகங்கள் ஆகும். இந்தியாவிற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாகத்துடன் இவ்வாகனம் உருவாகியிருப்பதாக நிறுவனம் பெருமிதம் தெரிவித்திருக்கின்றது. எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு நிறுவனம், 5 ஆண்டுகள் வாகனத்திற்கான வாரண்டியையும், 6 ஆண்டுகள் பேட்டரிக்கான வாரண்டியையும் அறிவித்திருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக