கார்ப்பரேட் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் பாரதி ஏர்டெல்லின் ஒரு பிரிவான ஏர்டெல் பிசினஸ், இப்போது புதிய வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனத்தை வழங்குகிறது. அதாவது 'மை வைஃபை' என்ற புதிய வைஃபை இணைப்பு சேவையை வழங்குகிறது. நிறுவனம் அல்லது கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு இப்போது நான்கு Airtel My WiFi திட்டங்கள் கிடைக்கின்றது. இந்த மை வைஃபை திட்டங்கள் ரூ. 299 முதல் தொடங்கி ரூ. 499 விலை வரை கிடைக்கிறது. உயர்நிலைத் திட்டங்கள் கூகுள் ஒர்க்ஸ்பேஸ் போன்ற நன்மைகள் மற்றும் ஏராளமான டேட்டாவுடன் வருகின்றது.
Airtel My WiFi டாங்கில் சாதனம் மிகவும் எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான கேட்ஜெட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வோம் வாருங்கள். ஏர்டெல் நிறுவனம் அண்மையில் அதன் பயனர்களுக்கான சேவையைச் சிறப்பாக்க ஏராளமான புதிய திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
உண்மையைச் சொல்லப் போனால், நாட்டில் உள்ள மற்ற எந்தவொரு நெட்வொர்க்கும் வழங்காத கூடுதல் நன்மைகளை ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் மூலம் வழங்கி வருகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையையும் வழங்குகிறது.இப்போது ஏர்டெல் நிறுவனம், தனது பயனர்களுக்காக ஏர்டெல் மை வைஃபை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் கிடைக்கும் முதல் My WiFi ஏர்டெல் திட்டம் மாதத்திற்கு ரூ. 299 விலையில் வருகிறது.
ஏர்டெல் மை வைஃபை கீழ் கிடைக்கும் முதல் My WiFi ஏர்டெல் திட்டம் மாதத்திற்கு ரூ. 299 விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஏர்டெல் பயனர்களுக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை உடன் 30 ஜிபி மாதாந்திர டேட்டா நன்மை கிடைக்கிறது. அனைத்து திட்டங்களுடனும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்குதலில் டாங்கிளைச் சேர்க்கும் விருப்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியான திட்டம் ரூ. 349 விலையில் வருகிறது.
இந்த ரூ. 349 திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் 40 ஜிபி வரை டேட்டா நன்மை கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்குவதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, 60 ஜிபி டேட்டா நன்மை மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்கும் திட்டமாக ரூ. 399 மை வைஃபை திட்டம் செயல்படுகிறது. இந்தத் திட்டம் பயனர்களுக்கு Google Workspace சேவைக்கான அணுகலையும் வழங்குகிறது.
இறுதியாக, ஏர்டெல் மை வைஃபை திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ. 499 திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம், இந்த ரூ. 449 விலை கொண்ட மை வைஃபை திட்டமானது அதன் பயனர்களுக்கு 100 ஜிபி வரையிலான டேட்டா நன்மையை வழங்குவதோடு, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் கூகுள் ஒர்க்ஸ்பேஸ் சேவைக்கான அணுகலையும் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலைகள் வரி சேர்க்கப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. பயனர்களுக்குத் தேவையான இணைப்பை வழங்க பாரதி ஏர்டெல்லின் 4ஜி நெட்வொர்க்குடன் டாங்கிள் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு எளிய வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனமாகும். இது நீங்கள் எங்குச் சென்றாலும் தொடர்ந்து இணைந்திருக்க உதவும். இன்றைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கும் திறனுடன் வந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் இது பாரதி ஏர்டெல்லின் நிறுவன பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக சாதனம் என்பதனால், இணைய வேகம் இதில் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாரதி ஏர்டெல்லின் சிம் கார்டை நீங்கள் வைக்கக்கூடிய சாதனம் பின்புறத்திலிருந்து திறக்கிறது. இது உங்கள் பாக்கெட் அல்லது பைக்குள் மிக எளிதாகப் பொருத்தக்கூடியது வகையில் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உங்களுடன் நூலகம், பூங்கா, அலுவலகம், கல்லூரி போன்ற பல இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியையும் இது வழங்குகிறது. இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், 18 ஆம் மாதத்தில் இருந்து தனித்தனியாக டாங்கில்களுக்கு நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
பாரதி ஏர்டெல் இதை 18 மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மை வைஃபை டாங்கிள் தனித்தனியாக வாங்கும் போது ஒருமுறை கட்டணமாக வெறும் ரூ. 2000 விலையில் கிடைக்கிறது. இந்த ஏர்டெல் பிசினஸ் மை வைஃபை திட்டங்களை நீங்கள் இன்று வாங்க விரும்பினால், ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்திற்கு நேரடியாகச் செல்லலாம். ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை நீங்கள் இப்போது காண முடியும்.
ஹாட்ஸ்பாட் பயன்படுத்துவதால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி வேகமாகத் தீர்ந்துவிடும் என்று நீங்கள் கவலைப்படும் பட்சத்தில், இந்த டாங்கில் உங்கள் பையில் வைத்துக்கொள்ள ஒரு நல்ல சாதனமாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய டாங்கிள்களின் தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், அவை இன்னும் பல நிறுவனங்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் நிறையப் பயன்படுகின்றன. எண்டர்பிரைஸ் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மை வைஃபை திட்டங்களை டாங்கில் இல்லாமலும் கூட வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் தேவைக்கு ஏற்ப, உங்களுக்குப் பொருந்தமான திட்டத்தைத் தேர்வு செய்து பயன்பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக