எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மீண்டும் மானியத்தை வழங்கத் தொடங்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். எல்பிஜி நேரடி மானியத்தைக் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், திரவ எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கு மத்திய அரசு மீண்டும் மானியம் வழங்கத் தொடங்கும் எனச் சாமானியர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி வழங்கும் மானிய திட்ட துவங்கப்பட்டால், குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 5 மற்றும் ரூ. 10 குறைத்தது. எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை அரசாங்கம் மீண்டும் தொடங்கலாம் என்று பலர் நம்புவதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, எல்பிஜி சிலிண்டரின் விலை இந்தியாவில் 1000 ரூபாயைத் தொட உள்ளது. அரசாங்கத்தின் உள் மதிப்பீட்டின்படி, நுகர்வோர், சிலிண்டருக்கு, 1000 ரூபாய் வரை செலுத்தத் தயாராக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய அரசு இரண்டு வழிகளில் சிலிண்டர்களை விற்கத் திட்டமிட்டுள்ளது. மானியம் இல்லாமல் எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதை அரசாங்கம் தொடரலாம் என்பது ஒரு வழியாகும். இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு அரசாங்கம் மானியங்களை வழங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழிகளில் அரசாங்கம் எதைச் செய்யும் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
LPG சிலிண்ட்ருக்கான மானியங்களுக்கு யார் எல்லாம் தகுதியுடையவர்கள்?
தற்போது வரை, எல்பிஜி மானியம் தொடர்பான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வெளியான சில தகவலின் படி, ஒரு LPG சிலிண்டர் வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் போது மட்டும், அரசாங்கத்தின் மானியத்தைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மேல் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்காது என்று தெரிவிக்கிறது.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் எல்பிஜி கொள்முதல் மீது மானியம் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டம் தொடங்கப்படாதவர்களுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முதன்மைத் திட்டம் மே 1 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 தொற்றுநோயால் எரிபொருள் விலைகள் சரிந்த நேரத்தில், 2020 மே முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானியங்களை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. அந்த நேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் சர்வதேச விலைகள் கடுமையாகச் சரிந்தது. இருப்பினும் அரசாங்கம் மறைமுகமாக மானியங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. உதாரணமாக, 2021 நிதியாண்டில் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவு ரூ.3,559 ஆக இருந்தது, இதே 2020 நிதியாண்டில், இந்த செலவு ரூ.24,468 கோடியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக