Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 நவம்பர், 2021

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

தெரியாத நபரிடம் இருந்து வந்த குட் மார்னிங் மெசேஜ்

அடுத்த முறை உங்கள் மொபைல் எண்ணிற்குத் தெரியாத நபர்களிடம் இருந்து 'குட் மார்னிங்' அல்லது 'குட் நைட்' மெசேஜ் வந்தால் இனி மிகவும் கவனமாக இருங்கள். காரணம், தெரியாத நபர்களுக்கு குட் மார்னிங் மற்றும் குட் நைட் மெசேஜ்களை அனுப்பி, அந்த நபர்களுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கி, உங்களை ஹனி ட்ராப்பிங் வலையில் சிக்க வைக்கும் மோசடி கும்பல்கள் இப்போது அதிகமாகப் பெருகிவிட்டது. இப்படி, சமீபத்தில் 50 வயது நபர் ஒருவர் தெரியாத பெண்ணிடம் பேசி ரூ. 5.91 லட்சத்தை இழந்துள்ளார். இவர் செய்த இதே தவறை நீங்கள் செய்யலாம் இருக்கப் பதிவை முழுமையாகப் படிக்கவும்.

தெரியாத நபரிடம் இருந்து வந்த குட் மார்னிங் மெசேஜ்

அடுத்த முறை உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து "காலை வணக்கம்'' அல்லது "இரவு வணக்கம்" என்று குறுஞ்செய்திகள் வந்தால், உஷாராக இருங்கள். 50 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் சுமார் ரூ. 5.91 லட்சத்தை இழந்துள்ளார். இந்த நபருக்குத் தினசரி "குட் மார்னிங்" மெசேஜ் தெரியாத எண்ணில் இருந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட இது போன்ற குறுஞ்செய்திகள் அவருக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தெரியாத எண்ணிலிருந்து வந்துள்ளது.

தொடர்ந்து 2 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த காலை வணக்கம் குறுஞ்செய்தி

கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற 20 மெசேஜ்கள் தெரியாத நபர்களிடமிருந்து அவருக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மெசேஜ்களுக்கு பதிலளிக்க அந்த முதியவர் முயன்றிருக்கிறார். அதன் விளைவாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அந்த நபர், குட் மார்னிங் மெசேஜ் வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த முனையில் அந்த தெரியாத எண்ணில் இருந்து ஒரு பெண் பேசியுள்ளார். இருவருக்குமான பேச்சுவார்த்தை நெருக்கத்தை அதிகரித்துள்ளது.

நேரில் சந்திக்க ஆசை வார்த்தை பேசிய பெண்

இதன் விளைவாக, அக்டோபர் 8 ஆம் தேதி மாலை 6.30 அளவில் அந்த பெண் 50 வயது முதியவரை போனில் தொடர்பு கொண்டு, அவர் நீண்ட நாட்களுக்குப் பின் பெங்களூரு வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். தனிமையில் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த முதியவரிடம் ஆசை வார்த்தை பேசியுள்ளார். இத்துடன், அந்த பெண் பெங்களூரில் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையின் எண் மற்றும் சரியான லொகேஷன் விபரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். பெண்ணிடம் இருந்து வந்த செய்திகளைப் பார்த்து முதியவர் நேரில் செல்ல முடிவெடுத்துள்ளார்.

ஹோட்டல் அறை எண் 212-ல் காத்திருந்த விபரீதம்

அந்த பெண் கொடுத்த விபரங்களோடு இரவு 10.30 மணி அளவில் அந்த முதியவர் வீரண்ணபாளைய அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஹோட்டலுக்கு சென்ற நபர், அந்த பெண் தங்கி இருந்த அறை எண் 212-க்கு நேரடியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் கதவைத் திறந்து அறைக்குள் அழைத்த போது, அறைக்குள் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பேரைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். மூவரும் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, முதியவரைப் போதைப்பொருள் வியாபாரி என்பது போல் சித்தரித்துள்ளனர்.

பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி லாக் ஓபன் செய்த மர்ம நபர்கள்

முதியவரை முடக்கிப் பிடித்து, அவருடைய பர்சில் இருந்த கிரெடிட் கார்டு, மொபைல் போன் மற்றும் பணப்பையை அவர்கள் முதியவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், அவர்கள் முதியவரின் மொபைல் பாஸ்வோர்டை உள்ளிட்டு தொலைப்பேசியைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர், முதியவரின் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி லாக்கை ஓபன் செய்யும்படி, அவரை மிரட்டி வற்புறுத்தியுள்ளனர். முதியவரின் கட்டாயப்படுத்தி பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி லாக்கையும் திறந்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து தப்பி ஓட்டம்

சிறிது நேரத்திற்கு பின் முதியவரின் மொபைல் போன், பர்ஸ், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றை வீசி எறிந்துவிட்டு, முதியவரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, மூவரும் ஹோட்டலில் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். மிகுந்த பயத்தில் உறைந்த முதியவர் ஹோட்டல் அறையில் இருந்து தப்பித்து வீட்டிற்கு வந்ததாகக் கூறியுள்ளார். வீட்டுக்கு வந்த பின் அவர் மொபைலை சோதனை செய்த போது, முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஐந்து பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

வங்கி கணக்கில் இருந்து மாயமான பணம்

முதியவரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ. 3,91,812 பரிமாற்றம் செய்யப்பட்திருப்பத்தை கண்டுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அவரின் கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக மற்றொரு குறுஞ்செய்தி வந்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். இப்படி அவரின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 5.9ஃ லட்சம் இழந்ததை அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெண்களை வைத்து ஆசை வார்த்தை பேசி, தனியாக அழைத்து பணம் பிடுங்கும் ஹனி ட்ராப்பிங் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் கவனமாக இருப்பது நல்லது.

கவனமாக இருங்கள் மக்களே.. இந்த தவறை செய்யாமல் புறக்கணிப்பது பாதுகாப்பானது

இவர்களின் முக்கிய இலக்கே திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் விவாகரத்து ஆனா ஆண்கள் தான் என்கிறது சமீபத்திய ஆய்வின் முடிவுகள். பெரும்பாலும் இந்த கும்பல் மேட்ரிமோனியல் வலைத்தளங்களில் வரன் தேடும் நபர்களின் ப்ரொபைலில் இருந்து அவர்களின் மொபைல் எண்கள் மற்றும் விபரங்களைச் சேகரித்துத் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது. தெரியாத நபர்களிடம் இருந்து இனி எந்தவொரு மெசேஜ் வந்தாலும், அவற்றைப் புறக்கணிப்பது உங்களுக்குப் பாதுகாப்பானது. குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக