ஜியோ
நிறுவனம் விரைவில் புதிய ஜியோபுக் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட்
விலையில் வெளிரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்
இந்நிறுவனம்
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து விற்பனை கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது டெலிகாம்டாக் வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய ஜியோபுக் லேப்டாப் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஜியோ லேப்டாப் சாதனம் ஆனது 2ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த தளத்தில் வெளிவந்த தகவலின்பபடி, இந்த ஜியோ லேப்டாப் மாடல் எண் NB1112MM என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் மீடியாடெக் எம்டி6788 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஆனால்XDA டெவலப்பர்களின் முந்தைய தகவலின்படி, ஜியோபுக் லேப்டாப் ஆனது எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த ஜியோபுக் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு தான் எந்த சிப்செட் வசதி இருக்கிறது என்று தெளிவாக தெரியும்.
அதேபோல் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 32ஜிபி ஈஎம்எம்சி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மினி எச்.டி.எம்.ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், குவால்காம் ஆடியோ சிப்,
JioStore,
JioMeet, JioPagesஆப்ஸ் மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும்
மைக்ரோசாப்ஃப்ட் ஆபிஸ்போன்ற பல சிறப்பான ஆதரவுகளுடன் இந்த புதிய லேப்டாப்
மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக
இந்த லேப்டாப் மாடலில் வெப் கேமரா வசதியும் இடம்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான
வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த லேப்டாப்
மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ஜியோபோன் மாடலுக்கு ஒரளவு வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக