இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து, தனது சில்லறை வணிகத்தினை பெரியளவில் விரிவாக்கம் செய்து வருகின்றது.
குறிப்பாக தனது ரீடெயில் வணிகத்தில் ஆடம்பர மற்றும் டிசைனர் ஆடை வர்த்தக பிரிவில் விரிவாக்கம் செய்து வருகின்றது. தொடர்ச்சியாக பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருவதுடன், பல நிறுவனங்களுடன் கூட்டணியும் வைத்து வருகின்றது.
தொடர் விரிவாக்கம்
சமீபத்தில் முகேஷ் அம்பானி சினிமா மற்றும் ஆடம்பர ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா நிறுவனத்தில், 40% பங்குகளை வாங்கியது. ரிது குமார் நிறுவனத்தில் 52% பங்குகளையும் வாங்கியது. அதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் தனது பாரம்பரிய ஆடை விற்பனை மட்டும் விரிவாக்கம் செய்ய Avantra என்ற பிராண்டை உருவாக்கியது.
Amante கையகப்படுத்தல்
இதற்கிடையில் தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் நிறுவனம், இலங்கையின் MAS ஹோல்டிங்கின் சொந்த நிறுவனமான, MAS பிராண்ட்ஸ் கீழ் உள்ள Amante நிறுவனத்தின் முழு பங்குகளையும் வாங்கியுள்ளது. இது ஒரு உள்ளாடை நிறுவனமாகும். இந்த நிறுவனம் மொத்த சில்லறை மற்றும் மொத்த விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றது.
Amante வணிக செயல்பாடு
Amante நிறுவனம் அதன் தயாரிப்புகளை அதன் கடைகள் மற்றும் பல பிராண்ட் விற்பனை நிலையங்கள் மூலமாகவும், இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. அதன் ஈ-காமர்ஸ் சேனல்கள் மூலமும் விற்பனை செய்து வருகின்றது. இப்படி ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவியுள்ள, அமண்டே பிராண்டினை தான் இந்த நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
சிறந்த தேர்வு
இது குறித்து ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சர்ஸின் இயக்குனர் இஷா அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனம் தனது போர்ட்போலியோவில் உயர் தரமான ஆடைகளாக அமண்டேவினை சேர்ப்பதில் பெருமிதல் கொள்கிறது. இது சர்வதேச அளவில் மக்கள் அறியப்பட்ட ஒரு பிராண்ட். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வினை வழங்கும் என கூறியுள்ளார்.
இன்றைய நிலவரம் என்ன?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, என் எஸ் இ-யில் 1.51% அதிகரித்து அல்லது 38.55 ரூபாய் அதிகரித்து, 2,593.10 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-ல் 1.47% அதிகரித்து அல்லது 37.55 ரூபாய் அதிகரித்து, 2,592.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்றைய உச்ச விலை 2598.80 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2557 ரூபாயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக