வியாழன், 25 நவம்பர், 2021

இதோ ஐஎம்இஐ பட்டியலில் வந்துருச்சு: பார்க்க அப்படி இருக்கு., விரைவில் வரும் போக்கோ எக்ஸ் 4!

இதோ ஐஎம்இஐ பட்டியலில் வந்துருச்சு: விரைவில் வரும் போக்கோ எக்ஸ் 4!

வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்த பல அறிக்கைகள் மற்றும் தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. போக்கோ எக்ஸ் 4 சீரிஸ் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். போக்கோவில் இருந்து வரவிருக்கும் சாதனங்கள் குறித்து பார்க்கையில் போக்கோ எக்ஸ் 4 மற்றும் போக்கோ எக்ஸ் 4 ஜிடி ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக போக்கோ எக்ஸ் 4 இரண்டு வகைகளில் வெளியிடப்படலாம் எனவும் இதில் நிலையான மாறுபாடு மற்றும் என்எஃப்சி மாறுபாடு என்ற இரண்டு மாறுபாடுகள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ் 4 சீரிஸ் ஸமார்ட்போன்கள் ஐஎம்இஐ தரவுத்தள பட்டியலில் காணப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வரவிருக்கும் போக்கோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனிந் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எக்ஸ்4 சீரிஸ் ஐஎம்இஐ பட்டியல்

ஐஎம்இஐ தரவுத்தளத்தில் உள்ள பட்டியலின்படி போக்கோ எக்ஸ் 4 மாடல் எண் 2201116பிஐ உடன் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் போக்கோ எக்ஸ்4 என்எஃப்சி மாடல் எண் 2201116PG உடன் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஐஎம்இஐ பட்டியலில் இந்த போன்கள் பெயர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிராண்டின் முந்தைய அறிமுகங்கள் குறித்து ஒப்பிட்டு பார்க்கையில் இதில் உள்ள ஐ என்ற எழுத்து சாதனம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மறுபுறம் என்எஃப்சி மாறுபாடு உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ எக்ஸ் 4 சாதனத்தின் நிலையான மாறுபாடு மற்றும் என்எஃப்சி மாறுபாடு ஆகிய இரண்டு மாறுபாடுகளுக்கும் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் போக்கோ எக்ஸ் 3 மற்றும் போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி சாதனம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின.

தற்போது வெளியான அனைத்தும் தகவல்களே என்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இவை அனைத்தும் தகவல்களே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ததை தொடர்ந்து போக்கோ எக்ஸ்4 மற்றும் போக்கோ எக்ஸ்4 என்எஃப்சி குறித்த தகவல்கள் வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1080 பிக்சல் டிஸ்ப்ளே அளவை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டிருக்கிறது. மேலும் டச் மாதிரி விகித்தை பொறுத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன் 240 ஹெர்ட்ஸ் டச் விகிதத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் இதன் டிஸ்ப்ளே 450 நிட்ஸ் பிரகாச உச்சநிலையை கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிக்கென கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் முழு அகல கேமரா பேனலை கொண்டிருக்கும் எனவும் இது 50 மெகாபிக்சல் பிராதன கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 119 டிகிரி ஃபீல்ட் வியூ அளவை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பேட்டரி ஆயுள் அளவு மற்றும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ ஸ்மார்ட்போன் அதன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் எனவும் இது 33 வாட்ஸ் வேகமான சார்ஜருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீத சார்ஜிங்கை வெறும் 59 நிமிடத்தில் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சார்ஜ் செய்த 10 நிமிடத்தில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 2.5 மணிநேர வீடியோ பார்க்கும் அனுபவத்தை பெறலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்