Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 நவம்பர், 2021

4 ஜிஎஸ்டி வரி பலகையை மூன்றாகக் குறைக்கத் திட்டம்.. மக்களுக்குப் பாதிப்பா...?!

இந்தியாவின் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசும், நிதியமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மத்திய நிதியமைச்சகத்தின் திங்க் டேங்க் அமைப்பான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (NIPFP) ஜிஎஸ்டி வரி சீர்திருத்த மாதிரி திட்டத்தை முன்வைத்துள்ளது.

NIPFP அமைப்பு

NIPFP அமைப்பு சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி ஜீரோ சதவீத வரி அளவீடு கணக்கில் சேர்க்காமல் மீதமுள்ள 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 வரி பலகையை 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கலாம் என்ற மாதிரி திட்டத்தை முன்வைத்துள்ளது. 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கப்படுவதன் மூலம் மத்திய அரசு எவ்விதமான வரி வருமான அளவீடும் பாதிக்காது எனக் குறிப்பிட்டு உள்ளது.

கர்நாடக முதல்வர்

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த கூட்டத்தின் கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ்.பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி வரி பலகையைச் சீர்திருத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. இக்குழுவின் முடிவு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றால் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 4 வரிப் பலகை மறுசீரமைப்புச் செய்து 3 ஆகக் குறைக்கப்படும்.

வரிப் பலகை மறுசீரமைப்பு

தற்போது NIPFP அமைப்புச் சமர்ப்பித்துள்ள திட்டத்தில் 0% அடுத்து இருக்கும் 5 சதவீத வரியை 8 சதவீதமாக உயர்த்த உள்ளது. இதேபோல் 12% மற்றும் 18% பலகையை இணைத்து 15 சதவீதமாகச் சேர்க்கப்பட உள்ளது.

நடுத்தர மக்கள்

இதன் மூலம் சாமானிய நடுத்தர மக்கள் தற்போது வாங்கும் பெரும்பாலான பொருட்களை அதிக வரி கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். மேலும் 18 சதவீத வரி பிரிவின் கீழ் இருக்கும் 15 சதவீதமாகக் குறைக்கும் பட்சத்தில் வரி வருமானம் குறையும். இதைச் சரி செய்ய 28 சதவீத வரியை 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

40 சதவீத பொருட்கள்

தற்போது இருக்கும் வரி விதிப்பில் 40 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பில் கீழ் வருகிறது. இந்நிலையில் இப்பிரிவில் செய்யும் மாற்றம் மத்திய மாநில அரசின் வரி வருமானத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், இதைச் சமாளிக்கக் கட்டாயம் பிற பிரிவு வரி அளவீட்டை உயர்த்த வேண்டும்.

7 வரிப் பலகை

ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% தாண்டி இன்னும் 3 வரி விதிப்பு அளவீடுகள் உள்ளது. அடிப்படைத் தேவை பிரிவின் கீழ் இருக்கும் பொருட்களுக்கு 0%, வைரம் மீதான சிறப்பு வரியான 0.25 சதவீதம், ரத்தினம் மற்றும் நகை மீது 3 சதவீத ஜிஎஸ்டி வரி உள்ளது. இது high-value low volume goods என்பதால் இதில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என NIPFP அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக