Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 நவம்பர், 2021

மிக சரியான எடை எதுவாக இருக்கும்? யோசிங்க பாஸ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------
இண்டர்வியூ அதிகாரி, மாணவன்...!!
-------------------------------------------------
இண்டர்வியூ அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போற?
மாணவன் : நீங்கதான சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
இண்டர்வியூ அதிகாரி : 😩😩

இண்டர்வியூ அதிகாரி : உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?
மாணவன் : சுவிட்சர்லாந்து...
இண்டர்வியூ அதிகாரி : எங்கே ளுpநடடiபெ சொல்லுங்க.
மாணவன் : ஐயையோ...? அப்படின்னா கோவா.
இண்டர்வியூ அதிகாரி : 😝😝
-------------------------------------------------
மூளைக்கு வேலை...!!
-------------------------------------------------
ப்ரஜன் ஒரு விழாவிற்கு சென்றான். அங்கிருந்த ஒரு கடைக்காரர் நான் ஒருவரின் 'மிக சரியான எடை"-யை ஒரு பேப்பரில் எழுதி தருவேன். நான் சரியாக எழுதிவிட்டால் அவர் எனக்கு 1000 ரூபாய் தர வேண்டும். தவறாக எழுதிவிட்டால் நான் அவருக்கு 2000 தருவேன் என்றார்.

ப்ரஜன் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே எந்த ஒரு எடை போடும் இயந்திரமும் இல்லை, இதனால் அவன் போட்டிக்கு ஒப்புக்கொண்டான். போட்டியில் அந்த நபர் ப்ரஜனின் எடையை எழுதவில்லை. ஆனாலும் ப்ரஜன் அந்த கடைக்காரனிடம் 1000 ரூபாய் கொடுத்தான். அது ஏன்?

விடை கீழே👇👇 
-------------------------------------------------
நாவற்பழம்..!!
-------------------------------------------------
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நாவற்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடையும், இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
-------------------------------------------------
விடை :
-------------------------------------------------
அவர் சொன்னது 'மிக சரியான எடை" என்ற வார்த்தைதான். ஆகவே அவர் சொன்னது போல பேப்பரில் மிக சரியான எடை என்ற வார்த்தையை எழுதி ப்ரஜனிடம் இருந்து 1000 ரூபாயை வாங்கி கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக