Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 நவம்பர், 2021

உலகின் 5 மிக விலை உயர்ந்த மதுபானங்கள்: வினோத தகவல்கள்

மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது. இருப்பினும், உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மது அருந்துகின்றனர். தற்போது மது அருந்துவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிவிட்டது. பெரிய பணக்காரர்கள் தங்கள் வீட்டின் விருந்தினர்களுக்கு விலையுயர்ந்த மதுவை பரிமாறுகிறார்கள். இந்த பதிவில், உலகின் மிக விலையுயர்ந்த 5 மதுபானங்களைப் பற்றி பார்க்கலாம், அவற்றின் விலையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 

டக்கீலா லே .925 இந்த பட்டியலில் முதலில் வருகிறது. இந்த மது பாட்டிலில் 6400 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒயின் மெக்சிகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை 6400 வைரங்கள் பதித்த இந்த மது பாட்டிலை யாரும் வாங்கவில்லை.

 

இந்த ஒயின் இரண்டாம் இடத்தில் வருகிறது. ஒவ்வொரு பாட்டிலின் நடுவிலும் வெவ்வேறு வகையான அச்சு உள்ளது. அதில் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் வைக்கப்படுகின்றன. அவை பானத்தை அலங்கரிக்கப் பயன்படுகின்றன. இந்த பாட்டிலின் விலை ரூ.7 கோடியே 30 லட்சம் ஆகும்.

இந்த மதுவின் பெயர் அமண்டா டி பிரிக்னாக் மிடாஸ் ஆகும். இது உலகின் மிக விலையுயர்ந்த ஷாம்பெயின் என்று கருதப்படுகிறது. இந்த ஷாம்பெயின் பாட்டிலின் அளவு மிகப் பெரியது. இந்த ஷாம்பெயின் விலை ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமாகும். இது தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கிறது.  

டால்மோர் 62 உலகின் விலை உயர்ந்த விஸ்கியாக கருதப்படுகிறது. இதுவரை 12 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விஸ்கி பாட்டிலின் விலை ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமாகும்.

பென்ஃபோல்ட்ஸ் ஆம்பூல் மிகவும் விலையுயர்ந்த சிவப்பு ஒயின் ஆகும். பேனா வடிவத்தில் பாட்டிலில் வரும் இந்த மதுவின் விலை சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக