Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 நவம்பர், 2021

அசுர வளர்ச்சியில் "கூ" ஆப்: அதிகாரப்பூர்வ மஞ்சள் டிக் பெறுவது எப்படி- டிக் வாங்கி வச்சுக்கோங்க யூஸ் ஆகும்!

தரநிலைகள் மதிப்பாய்வு"கூ" பயன்பாடு என்பது வளர்ந்து வரும் மைக்ரோ பிளாக்கிங் இணையதளமாகும். இந்திய தயாரிப்பு பயன்பாடான கூ ஆப் டுவிட்டருக்கு போட்டியிடும் வகையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது என்றே கூறலாம். மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்த பயன்பாடு உருவாக்கப்பட்டது. அதேபோல் கூ ஆப் இந்திய பயனர்களிடையே எதிர்பார்த்ததை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். நாடு முழுவதும் இருக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் இந்த தளத்தை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.கூ ஆப்பிற்கு அதிகரிக்கும் வரவேற்பு

இந்த தளத்திற்கான வரவேற்பு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் இந்நிறுவனம் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த தொடங்கி இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மஞ்சள் டிக் ஆகும். டுவிட்டரில் ப்ளூ டிக் வழங்கப்படுவது போன்ற பயன்பாடாகும் கூ பயன்பாட்டில் வழங்கப்படும் மஞ்சள் டிக். இந்த மஞ்சள் டிக் அம்சமானது பிரபலங்களின் கணக்குகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பயன்படுகிறது. வழங்கப்படும் மஞ்சள் டிக் பயனர்களின் அதிகாரப்பூர்வ கணக்கை குறிக்கிறது.

பிளாட்ஃபார்ம் நிர்ணயித்த அளவுகோல்கள்

மஞ்சள் டிக் பெற பிளாட்ஃபார்ம் நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் பயனர்களுக்கு டிக் வழங்கப்படுகிறது. இந்த மஞ்சள் டிக் பெறும் பயனர்கள் சிறப்பம்சம், திறன்கள் மற்றும் தொழில்முறை நிலை ஆகியவற்றின் அங்கீகாரமாக மஞ்சள் டிக் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்திய பயனர்களுக்கு ஏற்றப்படி தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அது எந்த நேரத்திலும் மாற்றம் செய்யப்படலாம் எனவும் கூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரநிலைகள் மதிப்பாய்வு

கூ Eminence Recognition இணைய ஆராய்ச்சி மற்றும் பொது வளர்ச்சி இணைந்து இந்த மதிப்பீடு செய்கிறது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தரநிலைகள் மதிப்பாய்வு செய்யப்படுவதையும் தளம் உறுதி செய்கிறது. நிறுவனத்தின் eminence.verification@kooapp.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்புவதன் மூலம் பயனர்கள் மஞ்சள் டிக் சரிபார்ப்பு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் விண்ணப்பத்திற்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும். சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூ எமினென்ஸ் டிக் பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கணக்கு வைத்திருப்பவர் குறித்த செய்தி தகவல்

கணக்கு வைத்திருப்பவர் குறித்த செய்தி தகவல் ஆன்லைனிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ கிடைக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் அல்லது நேர்காணல்கள் சேனல்கள் பதிப்பு இருக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் ஏதேனும் சாதனைகள் மற்றும் விருதுகள் இருக்க வேண்டும். கூ பயன்பாடு ஆனது எந்த நேரத்திலும் மஞ்சள் டிக்கிற்கான அளவுகோல்களை மாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் பயனர்களின் மஞ்சள் நிற டிக் முன் அறிவிப்பின்றி திரும்பப் பெறப்படும்.

டுவிட்டருக்கு இணை மாற்றாக கூ

டுவிட்டருக்கு இணை மாற்றாக கூ செயலி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கூ தற்போது இணையதளம் மற்றும் செயலியாக கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் செயலியை பதிவிக்கம் செய்து கொள்ளலாம். டுவிட்டர் பயன்பாட்டை போன்றே கூ பயன்பாடும் ஒரே நேரத்தில் 400 எழுத்துகள் வரை மட்டுமே பதிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. ஏணைய அம்சங்கள் ஒரே மாதிரியான தோற்றத்தையே அளிக்கிறது. கூ பயன்பாட்டில் டுவிட்டரை போன்றே ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தலாம், மேலும் கூடுதலாக நீங்கள் இடுகையில் மற்றொரு பயனரையும் குறிப்பிடலாம்.

15- 16 மாதங்களில் ஒரு கோடி பதிவிறக்கங்கள்

"கூ" செயலி கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்வதற்கு கிடைக்கத் தொடங்கியது. துவங்கிய 15- 16 மாதங்களில் ஒரு கோடி பதிவிறக்கங்களை கடந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து பெரிய வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது கூ. பல மொழி மைக்ரோ தளம் என குறிப்பிடக் காரணம் இதில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, அஸ்ஸாமி,பங்களா மற்றும் ஆங்கிலம் உட்பட எட்டு மொழிகளின் அணுகலை வழங்குகிறது.

பல தொழில்நுட்ப அம்சங்கள் அறிமுகம்

தளத்தை உருவாக்குவதற்காக கூ பல தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிகமான இந்தியர்களை ஆன்லைனில் உரையாட அனுமதிக்கிறது. இந்த தளத்தின் மூலமாக தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சமூகவலைதளங்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாட்டை நிறைவேற்றுவதில் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் முரண்பாடு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் கூ செயலிக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 2020-ல் தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து மகிழ்ச்சியடைகிறோம் என கூ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் போன்று செயல்படும் Koo

டுவிட்டர் போன்று செயல்படும் Koo என்ற செயலி இந்தியாவில் மட்டுமின்றி பலபகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது. மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளவந்துள்ளன. அதன்படி வெளியான முக்கிய செயலியே கூ ஆகும். Koo செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட தளம்

கூ இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தளமாக இருந்தது. கூ செயலி குறுகிய காலத்தில் சிறந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் நைஜீரியா அரசு நாட்டில் டுவிட்டரை தடை செய்து கூ செயலிக்கு அங்கீகாரம் வழங்கியதுதான். நைஜீரியாவில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்தும் கூ செயலி மூலமாகவே வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக