
பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டண உயர்வை சற்றுமுன் அறிவித்துள்ளது. தற்போதைய கட்டண உயர்வுகள், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒரு பயனருக்குச் சராசரி வருவாயான (ARPU) 200 ரூபாயை நெருங்கும் கனவை நனவாக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதன் கட்டணங்களை தற்போது உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனமும் இதனை தொடர்ந்து கட்டணத்தை அதிகரிக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், கட்டாயம் இந்த புதிய விலை பட்டியலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த விலை புள்ளியில் தான் உங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள், ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைத்த ரூ.79 விலை கொண்ட அடிப்படைத் திட்டமானது, இப்போது ரூ.99 என்ற விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டண உயர்வுகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு விவரமும் இங்கே முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. விலை அதிகரிப்புடன் ஏர்டெல் நிறுவனம் அதன் அடிப்படை திட்டத்துடன், ஏர்டெல் பயனர்களுக்கான நன்மைகளையும் அதிகரித்துள்ளது. ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) இப்போது முழுமையாக ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் ரீசார்ஜ் திட்டத்துடன் விலை மற்றும் விபரங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் அட்டவணையை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. இதன் படி முன்பு கிடைத்த ரூ.149 திட்டமானது இப்போது விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ரூ.179 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.
அதேபோல், இதற்கு முன்பு கிடைத்த ரூ. 219 திட்டம் இப்போது ரூ. 265 என்ற விலையில் கிடைக்கிறது. இது அதன் பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. இதேபோல், முன்பு ரூ. 249 விலையில் கிடைத்த திட்டம் இனி ரூ. 299 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் முன்பு வழங்கிய ரூ. 298 விலை திட்டமானது இனி ரூ. 359 விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அதன் பயனர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அடுத்தபடியாக பட்டியலில் 56 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு திட்டங்கள் இருக்கிறது.
முன்பு ரூ. 399 விலையில் கிடைத்த ரீசார்ஜ் திட்டம் இப்போது விலை அதிகரிப்பிற்குப் பின்னர் ரூ. 479 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. முன்பு ரூ. 449 விலையில் கிடைத்த திட்டம் இனி ரூ. 549 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.
இதற்கு அடுத்தபடியாக 84 நாட்கள் செல்லுபடியாகும் மூன்று திட்டங்களின் விலை புள்ளியும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 379 விலையில் கிடைத்த திட்டம் இப்போது ரூ. 455 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்கு மொத்தமாக 6 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. முன்பு ரூ. 598 விலையில் கிடைத்த திட்டம் இனி விலை அதிகரிப்போடு ரூ. 719 விலையில் கிடைக்கிறது.
இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. இங்கே பார்க்க வேண்டியது என்னவென்றால், டெல்கோவின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்ராகா இந்த ரூ. 598 திட்டம் இருந்தது, இப்போது இது ரூ. 719 என்ற விலையில் கிடைக்கிறது. கட்டண உயர்வு சதவீதத்தில் இது மிகவும் செங்குத்தானது. இதேபோல், ரூ. 698 விலை திட்டம் இனி ரூ. 839 என்ற விலையில் கிடைக்கும்.
சாதாரண ரீசார்ஜ் திட்டங்களுடன் ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர் திட்டங்கள் கூட விலை உயர்வை பெற்றுள்ளன. இதற்கு முன்னர் ரூ. 48, ரூ. 98 மற்றும் ரூ.251 விலையில் கிடைத்த வவுச்சர்கள், இப்போது ரூ. 58, ரூ. 118 மற்றும் ரூ. 301 விலைக்கு கிடைக்கும். அனைத்து திட்டங்களும் அவற்றின் பலன்களைத் தக்கவைத்துக் கொள்ளும், ஆனால் இப்போது விலை உயர்ந்த விலையில் இனி பயன்படுத்தக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வோடபோன் ஐடியாவும் இப்போது ஏர்டெல்லைப் போலவே கட்டணங்களை உயர்த்தப் பார்க்கிறது.
புதிய கட்டணங்கள் எப்போது முதல் அமல்படுத்தப்படுகிறது?
சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை அதிகரிப்பதில் ஜியோ அதிக கவனம் செலுத்துவதால், ரிலையன்ஸ் ஜியோ அதைச் செய்யுமா இல்லையா என்று எதுவும் சொல்ல முடியாது. ஏர்டெல்லைப் பொறுத்தவரை, சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம், ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ARPU தொடர்ந்து உயரும். புதிய கட்டணங்கள் நவம்பர் 26, 2021 முதல் அமலுக்கு வரும். எனவே பயனர்களுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே இருப்பதால், கட்டண உயர்வுகள் தொடங்கும் முன் அவர்கள் தங்களுக்குப் பிடித்த திட்டங்களைக் கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக