Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 நவம்பர், 2021

மீள முடியாத நஷ்டத்தில் பிஎஸ்என்எல்.. சொத்துகளை விற்க அரசு நடவடிக்கை..!

 மறுமலர்ச்சி திட்டம்

கடந்த சில வருடங்களாகவே தொலைத் தொடர்பு துறைக்கு போராட்ட காலம் தான். அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வந்ததலிருந்தே கடும் நஷ்டத்தை கண்டு வருகின்றன. அதிலும் பொதுத் துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின்னடைவையே சந்தித்தது.

உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
 

ஆரம்ப காலகட்டத்தில் இதை சமாளிக்க முடியாத இந்த நிறுவனம், தன்னார்வா ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெற்றனர்.

இன்று போட்டி நிறுவனங்கள் கூட 5ஜி லெவலுக்கு வந்துள்ள நிலையில், பொதுத்துறை இன்னும் 4ஜியை கூட எட்டவில்லை. அந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்து வருகின்றது.

மறுமலர்ச்சி திட்டம்

இதற்கிடையில் இந்த நிறுவனத்தை மேம்படுத்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான MTNL, BSNL உள்ளிட்ட இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. அதன் பிறகு தன்னார்வ விருப்ப ஓய்வூ திட்டத்தினை அமல்படுத்தியது. எனினும் தற்போது வரையிலும் கூட பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் சரிவில் தான் உள்ளன.

சொத்து விற்பனை திட்டம்

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி, போராடி வரும் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மறும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு, சொந்தமான கிட்டதட்ட 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 எவ்வளவு சொத்துகள்

மேற்கண்ட இந்த சொத்துகள் ஹைத்ராபாத், சண்டிகர், பாவ் நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிஎஸ்என்எல்-லின் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே மும்பையில் உள்ள வசாரி ஹில், கோரேல்கனில் உள்ள MTNL 270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்ய படியலிடப்பட்டுள்ளது.

20 மாடி கட்டிடம்

ஒஷிவாராவில் 20 அடுக்குமாடி குடியிருப்புகளும் இந்த சொத்து விற்பனையில் அடங்கும். இந்த பிளாட்களில் 1 பெட்ரூம், ஹால், கிட்சன், , 2 பெட்ரூம், ஹால், கிட்சன் கொண்ட ஆகியவை அடங்கும். இதன் விலை 52.26 லட்சம் ரூபாய் முதல் 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ளது.

ஏலம் எப்போது?

எம்டிஎன்எல் சொத்துக்களுக்கான ஏலம் டிசம்பர் 14 அன்று நடைபெறும். இது பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சொத்துகள் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான புத்துயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த திட்டத்திற்காக, இந்த இரு நிறுவனங்களின் 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் கண்டறிந்து பணமாக்கப்பட வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக