Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 நவம்பர், 2021

பேனா சொன்ன கதை... கொஞ்சம் சிரிங்க பாஸ் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ----------------------------------------------
நண்பர்கள் ஜோக்ஸ்...!!
----------------------------------------------
ராமு : நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?
சோமு : போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்...
ராமு : 😆😆
----------------------------------------------
கோபு : எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
பாபு : ஏன் தெரிஞ்சா கவலைப்படுவாங்களா?
கோபு : இல்ல.. தினமும் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!
பாபு : 😆😆
----------------------------------------------
பேனா சொன்ன கதை...!!
----------------------------------------------

என்னிடம் இருந்த பேனா ஒன்று சில நாட்களாக சரி வர எழுதவில்லை...

ஆனால் இன்று திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டது..

நான் அந்த பேனாவை எடுத்து எழுதிப்பார்த்தேன்..
 
என்ன ஆச்சரியம் அந்த பேனா இப்பொழுது நன்றாக எழுதுகிறது...
 
தவறி விழுந்த பேனாவே தன் பணியை சிறப்பாக செய்யும் பொழுது...

நம் வாழ்க்கை பயணத்தில் சில வீழ்ச்சிகள் வரத்தான் செய்யும் அது இயற்கை...!!

----------------------------------------------
திருக்குறளும், பொருளும்...!!
 ----------------------------------------------
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள் :

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
----------------------------------------------
சிரிங்க பாஸ்...!!
----------------------------------------------
நம்மளையும்😎 ஒரு ஆளா மதிச்சு 'பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்👮?
.
.
.
.
சலூன் கடைக்காரர் மட்டும் தான்...😜😜😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக