நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பறக்கும் டாக்சியை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த 5 சீட்டர் பறக்கும் டாக்சி குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்சி மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்த புதிய பறக்கும் டாக்சி வாகனத்தை உருவாக்குவதற்காக சூப்பர்நல் (Supernal) என்ற பெயரில் புதிய நிறுவனத்தையைும் கடந்த ஆண்டு ஸ்தாபனம் செய்தது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு சூப்பர்நல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சூப்பர்நல் நிறுவனம் உருவாக்கும் புதிய பறக்கும் டாக்சி சுற்றச்சூழலுக்கு உகந்ததாக பேட்டரியில் இயங்குவதுடன் முழுவதும் தானியங்கி கட்டுப்பாட்டு முறையில் செல்லும். அதாவது, நகர்ப்புறத்தில் டாக்சியாக பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பறக்கும் வாகனம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பறக்கும் டாக்சி வாகனத்தில் 5 பேர் பயணிக்கலாம். கடந்த ஆண்டு லாஸ் வேகாஸில் நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் இந்த பறக்கும் வாகனத்தின் கான்செப்ட் மாடலானது எஸ்ஏ-1 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது தரையிலிருந்து செங்குத்தாக மேலே எழும்பி பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
இதனால், நகர்ப்புற போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த பறக்கும் டாக்சி வாகனத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக இதர தனியார் மற்றும் அரசு பங்குதாரர்களுடன் முயற்சிகளை சூப்பர்நல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பஸ் நிலையம், டாக்சி ஸ்டான்டு இருப்பது போன்று குறிப்பிட்ட இடங்களில் இருந்து இந்த பறக்கும் டாக்சி வாகனங்களை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நகரின் முக்கிய நகரங்களை மிக எளிதாக சென்றடையும் வாய்ப்பை பெற முடியும்.
வரும் 2028ம் ஆண்டு பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பறக்கும் டாக்சி தயாரிப்பு பிரிவான சூப்பர்நல் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நகர்ப்புறத்தில் பறக்கும் டாக்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 2030ம் ஆண்டு நகரங்களுக்கு இடையே பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளதாக சூப்பர்நல் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் டாக்சி வாகன பயன்பாடு கனவு மெய்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக