இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து நஷ்டம் கண்டு வந்த நிலையில், இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பேரிடியாய் ஏஜிஆர் வழக்கும் வந்தது.
இதனால் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தன. சில நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் காணாமல் போயின. இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஜியோவின் கடுமையான போட்டியையும் சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
பெரும் நிவாரணம்
எனினும் தவித்து வந்த நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் பெரும் அவகாசத்தினையும் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து மீளத் தொடங்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல சீர்திருந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கட்டண அதிகரிப்பினை செய்துள்ளன. இதற்கிடையில் வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக நிதி திரட்டியும் வருகின்றன.
எஸ்பிஐ-வுடன் பேச்சு வார்த்தை
இதற்கிடையில் வோடபோன் நிறுவனம் அன்னிய முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், வோடபோன் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ உடனான பேச்சு வார்த்தை சாதகமாக அமைந்தால், இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். கடனை அடைக்க வழிவகுக்கும். ஆக மொத்தத்தில் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு இது உதவும். எனினும் இந்த பேச்சு வார்த்தை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
கடன் கிடைக்குமா?
பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், நிறுவனம் எந்த நிதியை பெறும் என்பதில் எந்த விதமான உறுதியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ல் ஒரு கட்டண போரை உருவாக்கிய நிலையில், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
திவால் நிலையில் இருந்து தப்பியது எப்படி?
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான இது மிகப்பெரிய வயர்லெஸ் ஆப்ரேட்டராகவும் உள்ளது. இந்த மொபைல் போன் நிறுவனங்களுக்கு தங்கள் நிலுவையை செலுத்த அரசாங்கம் போதுமான நேரத்தை அனுமதித்த பிறகு, திவால் நிலைக்கு பின்னர் தப்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக