Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 நவம்பர், 2021

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

 மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

நமக்கு வாகனத்தை பற்றி எல்லாம் விஷயங்களும் தெரிந்திருந்தாலும், சில சமயங்களில் புதுமையாக செய்கிறோம் என்கிற பெயரில் வித்தியாசமானவற்றை செய்து பார்க்கிறோம். அது பல தடவை தவறிலும், பெரிய செலவிலும் சென்று முடிகிறது. அதிலும் குறிப்பாக என்ஜின் அமைப்பில் விளையாட்டாக ஏதாவது குளறுப்படிகள் செய்துவிட்டால் மொத்தமாக வாகனத்தை ஓரங்கட்டி வைக்க வேண்டிய சூழல்நிலை கூட உருவாகலாம்.

பொருந்தாத எரிபொருளை பயன்படுத்துவதும் என்ஜினில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த பொருந்தாத எரிபொருளால் உண்டாகும் பிரச்சனையை விரைவாக செயல்பட்டால் பாதிப்பை குறைக்கலாம். இதற்கு உதாரணமாக கீழுள்ள வீடியோவினை காணலாம்.

இந்த 2021இல் வாங்கப்பட்ட புதிய மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் டீசலை நிரப்பியுள்ளனர். இந்த பிரச்சனை அப்போதே கண்டறியப்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர்களே டீசலை வெளியே எடுத்து, பெட்ரோலை நிரப்பி அனுப்பியுள்ளனர். இந்த மஹிந்திரா தார் வாகனம் பெட்ரோல் பங்கிற்குள் நுழைவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

அடுத்த காட்சியில், பெட்ரோல் பங்க் ஊழியர் காரில் டீசலை நிரப்புகிறார். இதனை கண்ட வாகனத்தின் உரிமையாளர் உடனடியாக மேற்கொண்டு டீசலை நிரப்பாத வண்ணம் தடுத்தார். வீடியோவில் அவர் கூறியதன்படி, முதலில் பங்கிற்குள் நுழைந்ததுமே டீசல் வேண்டாம், பெட்ரோல் தான் வேண்டும் என கூறிவிட்டாராம். இருப்பினும் அந்த ஊழியர் டீசலை நிரப்பியுள்ளார்.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

மஹிந்திரா தார் என்றாலே டீசல் என்ஜின் உடன் தான் வரும் என்கிற மனநிலையில் தான் இந்த ஊழியர் இருந்துள்ளார். இவர் மட்டுமல்ல, பெட்ரோல் பங்கின் மேலதிகாரி கூட இந்த வாகனம் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் என அடித்து கூறுகிறார். அப்படி இருக்க, பணியாளர் தவறு செய்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. பிறகு ஊழியர்களும், மெக்கானிக் ஒருவரும் வாகனத்தின் எரிபொருளை வெளியேற்றினர்.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

வாகனத்திற்கு அடியில் சென்று, இருந்த மொத்த எரிபொருளையும் முற்றிலுமாக நீக்கியுள்ளனர். இந்த மஹிந்திரா தார் வாகனத்தில் ஏற்கனவே 20 லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது. அதனுள் கூடுதலாக இந்த ஊழியர் கிட்டத்தட்ட 2.5 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். இருப்பினும் வாகனத்தில் இருந்த மொத்த எரிபொருளும் நீக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

பிறகு 5 லிட்டர் பெட்ரோல் மூலமாக டேங்க் முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதான் உள்ளே ஒட்டி கொண்டிருக்கும் டீசல் எல்லாம் வெளியே வரும். பெட்ரோல் தெளிக்கப்பட்ட பின்னர், இந்த தாரின் பாதி டேங்க் நிரப்பப்படுகிறது. பிறகென்ன, ஊழியர்கள் மீண்டும் தங்களது பணிகளை பார்க்க சென்றுவிட்டனர்.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

இந்த தாரின் உரிமையாளர் 100 கி.மீ பயணத்திற்கு பின்னர், வாகனத்தில் எந்தவொரு தவறையும் உணரவில்லை எனவும், என்ஜின் வழக்கம்போல் இயங்குவது போலதான் உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். பொருந்தாத எரிபொருளை நிரப்பிவிட்டோம் என தெரியவந்தால், முதலாவதாக நாம் செய்ய வேண்டியது, எதுவும் செய்யாமல் இருப்பதுதான். அதாவது வாகனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது ஓய்வு நிலையில் இருந்தால் ஸ்டார்ட் செய்யக்கூடாது.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

அடுத்ததாக செய்ய வேண்டியது, மெக்கானிக்கை அழைத்து என்ஜினிற்கு செல்லும் முதன்மை எரிபொருள் குழாயினை துண்டிக்க வேண்டும். இது உங்களுக்கே தெரியும் என்றால், நீங்களே செய்யலாம். ஆனால் இதன்பின் எரிபொருள் டேங்கை கையாள தெரிந்திருக்க வேண்டும். ஆதலால் இந்த பிரச்சனைக்கு தகுந்த மெக்கானிக்கை அழைப்பதுதான் சிறந்தது.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

இந்த வீடியோவில் இவர்கள் செய்ததை போல தான், நீளமான குழாயின் மூலம் முடிந்தவரையில் அனைத்து எரிபொருளையும் வாகனத்தில் இருந்து நீக்க வேண்டும். ஸ்டார்ட் செய்த நிலையில் பொருந்தாத எரிபொருளை நிரப்பி இருந்தால், அது என்ஜினிற்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளது. ஆதலால் முக்கிய எரிபொருள் குழாயிலும் ஏதேனும் எரிபொருள் இருந்தால் அவற்றையும் வெளியே எடுக்க வேண்டும்.

மஹிந்திரா தார் பெட்ரோல் வாகனத்தில் தவறுதலாக நிரப்பப்பட்ட டீசல்!! அடுத்த என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்!

எரிபொருள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட பிறகு, என்ஜினை சில முறை ஸ்டார்ட் செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் என்ஜின் அமைப்பில் ஏதேனும் எரிபொருள் இருந்தாலும் அவையும் வெளியே தள்ளப்படும். இது எல்லாம் முடிந்த பிறகு, தகுந்த எரிபொருளை இரண்டு லிட்டர்கள் (வாகனத்திற்கு ஏற்ப) செலுத்தி என்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின்னர் இந்த எரிபொருளையும் வெளியேற்றிய பிறகே வாகனத்தின் எரிபொருள் டேங்கை நிரப்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக