
LPG பயனர்களுக்கு எல்லாம் இது மகிழ்ச்சியளிக்க கூடிய ஒரு அற்புதமான செய்தி. தகுதியான பயனாளிகளின் கணக்கில் எல்பிஜி மானியத்தை அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, எல்பிஜி எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டருக்கு ரூ. 79.26 மதிப்பிலான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது. இருப்பினும் சில பயனாளிகளுக்கு சிலிண்டருக்கான மானியம் ரூ. 158.52 அல்லது ரூ. 237.78 என்ற மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
LPG நுகர்வோரும் அரசாங்கம் வழங்கும் மானியம் எவ்வளவு?
அனைத்து LPG நுகர்வோரும் சந்தை விலையில் எரிபொருளை வாங்க வேண்டும் என்பதே இப்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மானியத் தொகையைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்வதன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு குடும்பத்திற்கு தலா 14.2 கிலோகிராம் கொண்ட 12 சிலிண்டர்களை அரசாங்கம் மானியத்துடன் வழங்குகிறது. தற்போது, அரசாங்கம் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்படுத்துபவர்களுக்கு மானியத்தை விரிவுபடுத்துகிறது.
LPG சிலிண்டர் விலைகள் எப்படி அமல்படுத்தப்படுகிறது?
இதன்படி, அரசாங்கம் வழங்கும் LPG சிலிண்டர் மானியத்தை விரிவுபடுத்துவதோடு, சிலிண்டர் கிடைக்கும் குறைத்துள்ளது. LPG சிலிண்டர்களின் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி திருத்தப்படும். அந்த விலை மாற்றம் செய்யப்பட்ட அந்த மாதம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும். இது சில நேரங்களில் ஒரே விலையில் கூட தொடரலாம். சரி, இப்போது உங்கள் கணக்கில் மானியம் மாற்றப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கைமுறையாகச் சரிபார்க்க வேண்டும்.
IOCL, HP மற்றும் BPCL போன்ற அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் உங்கள் எரிவாயு மானியத்தின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். ஒருங்கிணைந்த இணையதளத்தில் எல்பிஜி மானிய நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே உள்ளது. முதலில் நீங்கள் உங்களுக்கான சிலிண்டர் மானியத்தைப் பற்றி அறிந்துகொள்ள உங்களின் LPG சிலிண்டருக்கான ஐடி விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் LPG ஐடி உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன செய்வது? பதற்றமடைய வேண்டாம், உங்களின் LPG ஐடி உங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை, நீங்கள் உங்கள் LPG பற்றி அறிந்துகொள்ள இந்த http://mylpg.in இணையதளத்தை முதலில் கிளிக் செய்யுங்கள். இதில் வலது மேல் முலையில் உங்கள் 17 இலக்க LPG எண்ணை உள்ளிடுங்கள் என்ற வார்த்தைக்குக் கீழ் Click here என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். அதை வைத்து இணையத்தில் உங்கள் தகவலைச் சரி பார்க்கலாம்.
கீழே உள்ள செயல்முறைகளைச் சரியாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் மானியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம். Click here விருப்பத்தை கிளிக் செய்த பின்னர் வரும் பக்கத்தில் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள். மூன்று விருப்பங்களிலிருந்து, நீங்கள் பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் அல்லது இண்டேன் விருப்பத்தை தேர்வு செய்யலாம். தேர்வு செய்யும் விருப்பம் உங்களை மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
புதிய பக்கத்தில், நீங்கள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதைப் பொறுத்து, சில விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். இந்த விவரங்களில் உங்கள் தொலைப்பேசி எண், உங்கள் வினியோகஸ்தரின் பெயர், உங்கள் நுகர்வோர் எண் போன்ற தகவல்களை உள்ளிட்ட வேண்டும். அதற்குப் பின்னர், நீங்கள் கேப்ட்சா குறியீட்டை நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களின் மானியத்தை அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு, உங்களின் LPG ஐடி ஏற்கனவே தெரிந்திருந்தால், பின்வருவனவற்றைச் செய்யலாம்.
முதலில் நீங்கள் LPG சிலிண்டர் சேவைக்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல சீண்டும். இந்த இணையதளத்திற்கு http://mylpg.in செல்லவும். இப்போது உங்கள் LPG ஐடியை கொடுக்கப்பட்டுள்ள இடத்தின் வலது மேல் புறத்தில் உள்ள பாக்ஸிற்குள் உள்ளிடவும். இப்போது, நீங்கள் எந்த OMC எல்பிஜியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், உங்கள் பயனர் விவரங்களை நிரப்ப வேண்டும். அதனைத் தொடர்ந்து, 17 இலக்க LPG ஐடியை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் விவரங்களை நிரப்பவும்.
இந்த செயல்முறையை மிக முக்கியமானது.. இதைச் செய்ய மறக்காதீர்கள்
பின்னர் கேப்ட்சா குறியீட்டில் உள்ள குறியீடுகளை உள்ளிட்டு submit கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் அனுப்பப்படும். அடுத்த பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டுக் கடவுச்சொல்லை உருவாக்கவும். உங்கள் மின்னஞ்சல் ஐடியில் செயல்படுத்தும் இணைப்பைப் பெறுவீர்கள். அந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் அவ்வாறு செய்தவுடன், உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும். இந்த செயல்முறையை முக்கியமானது, ஆகையால் கட்டாயம் இதைச் செய்ய மறக்காதீர்கள்.
சிலிண்டர் முன்பதிவு வரலாறு மற்றும் மானியத் தகவல்கள் காண்பிக்கப்படும்
இப்போது, mylpg.in கணக்கில் உள்நுழையவும். பாப் அப் விண்டோவில் உங்கள் எல்பிஜி கணக்குடன் உங்கள் வங்கியும் ஆதார் அட்டையும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் குறிப்பிடவும். இப்போது மீண்டும் சப்மிட் கிளிக் செய்யவும், சிலிண்டர் முன்பதிவு வரலாறு அல்லது மானியம் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
8 கோடி இலவச எல்பிஜி இணைப்பு
இங்கு உங்களுக்குத் தேவையான சிலிண்டர் மணியத் தகவல்கள் காண்பிக்கப்படும். அரசாங்கத்தின் PAHAL (DBTL) திட்டமானது, வாடிக்கையாளர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.இதற்கிடையில், சமையலறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளின் கவரேஜை அதிகரிக்க, PMUY இன் கீழ் ஏழை பெண்களுக்கு 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக