Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 நவம்பர், 2021

சட்டத்துக்கு புறம்பாக மொபைல் போன் செயலிகள் வாயிலாக கடன் வழங்கும் நிறுவனங்கள்.! எத்தனை தெரியுமா?

இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பாக

இப்போது வரும் மொபைல் செயலிகள் பல்வேறு வகையில் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக வங்கி சார்ந்த வேலைகள் என பல்வேறு தேவைகளுக்கு இந்த மொபைல் செயலிகள் அதிகம் பயன்படுகின்றன என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் ஒரு சில மொபைல் செயலிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பாக மொபைல்போன் செயலிகள் வாயிலாக கடன் வழங்கும் வணிகத்தை மேற்கொண்டு
வரும் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி பணிக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த அறிக்கையில், நாட்டில் இப்போது 600-க்கும் அதிகமான கடன் நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாகவும், அதேசமயம் இவை ஆண்ட்ராய்டு போனில் செயலிகள் வாயிலாக செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் சுமார் 1100 கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்த நிறுவனங்கள் குறித்து அடிக்கடி புகார்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 2562 புகார்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புகார்களில் பெரும்பாலானவை, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்கள் சம்பந்தமாக வந்தவை என்று கூறப்படுகிறது. எனவே இத்தகைய நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களின் நலனை காக்கும் வகையில், இதற்கென தனி சட்டத்தை இயற்றவும், ரிசர்வ் வங்கியின் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகள் வாயிலாக டிஜிட்டல் கடன்கள் வழங்கப்படுவது குறித்துஆராய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்த பணிக்குழுவை ரிசர்வ் வங்கி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக