
ஒப்போ புதிய ரெனோ 7 ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய ஸ்மார்ட் டிவி வரம்பை சீன சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய தொடர் ஆர்1 என்ஜாய் எடிஷன் 93% டிசிஐ-பி3 வண்ண வரம்பு ஆதரவோடு வருகிறது. இது எம்இஎம்சி தொழில்நுட்பம் மற்றும் டைன்ஆடியோ ஆல் ட்யூன் செய்யப்பட்ட உயர்தர ஆடியோ அமைப்புகளுடன் 4 கே பேனல்கள் அம்சத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ அமைப்பு ஆரம்பத்தில் ஓப்போவின் ப்ரீமியம் எஸ்1 ஸ்மார்ட் டிவி வரம்பில் காணப்பட்டது. வரவிருக்கும் ஆர்1 என்ஜாய் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 8கே வீடியோ ப்ளேபேக் ஆதரவை இது கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ புதிய ஸ்மார்ட் டிவி வரம்பை குறைந்தது மூன்று வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவி அளவு குறித்து பார்க்கையில் இது 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அல்லது 75 இன்ச் அளவுகளில் வரும் என கூறப்படுகிறது.
ஆர்1 என்ஜாய் மற்றும் எஸ்1 ஸ்மார்ட்டிவி வரம்பை தவிர, ஒப்போ அதன் கே9 ஸ்மார்ட்டிவி வரம்பையும் 43 இன்ச் முதல் 75 இன்ச் அளவிலான டிவி பேன்களுடன் விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. 91மொபைல்ஸ்.காம் அறிக்கையின்படி, ஒப்போ இந்த குறிப்பிட்ட தொடருடன் இந்திய ஸ்மார்ட்டிவி சந்தையிலும் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ கே9 ஸ்மார்ட் டிவி குறித்து மேலும் விவரங்களை பார்க்கலாம்.
ஒப்போ கே9 ஸ்மார்ட் டிவி ரேஞ்ச் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஒப்போ கே9 ஸ்மார்ட்டிவி மே 2021 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் டிவி வரம்பில் மூன்று வெவ்வேறு பேனல் அளவுகள் இருக்கும் எனவும் அது 43 இன்ச், 55 இன்ச் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 75 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. கே9 வரம்பில் இருக்கும் அனைத்து டிவிகளும் நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி 4கே எல்சிடி பேனல்கள் உடன் வருகிறது. எச்டிஆர் 10+ மற்றும் எச்எல்ஜி ஆதரவுடன் இது வருகிறது. அதேபோல் இதன் மிகப்பெரிய டிஸ்ப்ளே அளவான 75 இன்ச் மாடல் 10 பிட் பேனல் 1.07 பில்லியன் வண்ண ஆதரவோடு வருகிறது.
ஒப்போ கே9 ஸ்மார்ட் டிவி வரிசையானது ஆண்ட்ராய்டில் கலர் ஓஎஸ் டிவி 2.0 இயங்குதளத்துடன் வருகிறது. கலர் ஓஎஸ் டிவி ஸ்கின் என்பது ஒப்போவின் ஸ்மார்ட் டிவிகளின் முக்கிய வேறுபாடு அம்சமாகும். இது பெரிய பேனல் மற்றும் மேம்பட்ட பார்வை அனுபவத்தை வழங்குகிறது. கலர் ஓஎஸ் டிவி 2.0 ஓஎஸ் ஆனது சியோமியின் பேட்ச்வால் யுஐ உடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஒப்போ கே9 ஸ்மார்ட் டிவி ரேஞ்ச் குவாட் கோர் மீடியாடெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற அளவுகளிலும் 16 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த டிவியானது வைஃபை 6, இ-ஏஆர்சி, எச்டிஎம்ஐ 2.1 போன்ற சமீபத்திய இணைப்பு நிலைகளுடன் வருகிறது.
சியோமி தனது எம்ஐ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்டிவிகளின் விலை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது என்பதை கருத்தில் கொண்டிருக்கும் ஒப்போ, அதற்கு ஏற்ப தனது ஸ்மார்ட்டிவிகளின் விலையை இந்திய சந்தையில் நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் இடையே கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக