
அதேபோல் தொடக்கத்தில் இந்த நிலையம் 15 ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின்பு இந்த விண்வெளி நிலையத்தில் பல்வேறு அதிநவீன மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். அதேபோல் சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஷேன் கிம்ப்ரோ மற்றும் மேகன் மெக்ஆர்தர், ஜப்பானின் அகிஹிகோ ஹோஷைட் மற்றும் பிரான்சை சேர்ந்த தாமஸ் பெஸ்கெட் ஆகிய விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் இவர்கள் 4 பேரும் விண்வெளி நிலையம் சென்றிருந்தனர். மேலும் அங்கு இவர்கள் தங்களது பணியை முடித்த பிறகு அதே ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த 4 விண்வெளி வீரர்கள் சமீபத்தில் விண்வெளியில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு வந்தனர்.
ஆனால் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கழிவறை உடைந்ததால் வீரர்கள் 4 பேரும் டயப்பர் அணிந்து கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனையால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் தெரிவித்தது என்னவென்றால், விண்வெளி பயணம் மிகவும் சவால்கள் நிறைந்தது. எனவே இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் ட்விட்டர் பயனர்கள், விண்வெளி வீரர்கள் தங்கள் உடைகளில் ஏதேனும் வெப்பநிலை மாறுபாடுகளைஉணர்கிறார்களா என்று ட்விட்டர் வழியே கேட்டுள்ளனர். அதற்கு ஐஎஸ்எஸ் (International Space Station)-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஆனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கேள்விக்கு பதிலளித்தது.
அதாவது விண்வெளி இருப்பவர்கள் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்கிறார்கள். அதேபோல் வெப்பநிலை மாறுபாடுகளின் போது விண்வெளி வீரர் வசதியாக இருக்க உதவும் வகையில், ஸ்பேஸ்சூட்களில் குளிரூட்டும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு அடுக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்று நாசா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக