
மூலவர் : செல்வ விநாயகர்
தல விருட்சம் : வன்னிமரம்
புராணப்பெயர் : ஸ்வயம்பாக்கம்
ஊர் : சேண்பாக்கம்
மாவட்டம் : வேலூர்
தல புராணம் :
ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தியை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து இத்தலம் வந்தார்.
11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார். பின் தன் ஞான திருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார்.
சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரின் வழிபாட்டிலிருந்தே இந்த கோவிலின் பழமையும், சிறப்பும் விளங்கும். இந்த யந்திரத்தின் அருகே நவகிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.
11 சுயம்பு மூர்த்திகள் :
மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது.
1. பால விநாயகர்
2. நடன விநாயகர்
3. ஓம்கார விநாயகர்
4. கற்பக விநாயகர்
5. சிந்தாமணி விநாயகர்
6. செல்வ விநாயகர்
7. மயூர விநாயகர்
8. மூஷிக விநாயகர்
9. வல்லப விநாயகர்
10. சித்திபுத்தி விநாயகர்
11. பஞ்சமுக விநாயகர்.
இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார்.
ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்குதான் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
தலச்சிறப்பு :
பதினாறு வகை செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான 11 செல்வங்களை அள்ளித்தரும் வள்ளலாக 11 விநாயகர்கள் உள்ளனர். 'விநாயக சபை" என்று இந்த அமைப்புக்கு பெயரிட்டுள்ளனர்.
தேவர்கள், ரிஷிகள் தினமும் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு வசதியாக மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது.
கோவில் கொடிமரம் மற்ற கோவில்களைப் போல் வெளியே இல்லாமல், மூலஸ்தானத்திலேயே அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.
இங்கு அனைத்துமே சுயம்பு என்பதால் ஒவ்வொரு விநாயகரையும் அந்தந்த பெயரில் சுதையில் வடித்து கோவில் சுற்று சுவரில் வைத்துள்ளார்கள்.
விநாயகரின் பின்புறம் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், அன்னை காமாட்சியும் உள்ளனர்.
இங்கு இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். அதில் ஒருவர் விநாயகரை போலவே சுயம்பு மூர்த்தி.
தல விருட்சமாக இருக்கும் வன்னிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. கோவில் உருவான காலத்திலிருந்தே இருக்கும் இந்த மரம் மிகப்பெரியதாக வளர்ந்துள்ளது.
விநாயகர் கோவிலில் வன்னிமரம் இருப்பது மிகவும் விசேஷமானது. வன்னிமரத்தின் அதிபதி சனீஸ்வரன்.
பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வ விநாயகருக்கு எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் மூஷிக வாகனங்களை பிரதிஷ்டை செய்தனர்.
பதினொரு விநாயகர், யானை மற்றும் மூஷிக வாகனங்கள், கொடிமரம் ஆகியவற்றை சேர்த்து பார்க்கும்போது, 'ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் அமைப்பில் தெரியும்.
வேண்டுதல்கள் :
சனி தோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பழமையான மரத்தை வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக