Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 நவம்பர், 2021

திறந்த வெளியில்... அரச மர நிழலில் ஸ்ரீ ஒப்பிலாய் அம்மன் திருக்கோயில் அரியலூர்

Sakthi Vikatan - 16 January 2018 - முதல் அழைப்பு அம்மனுக்கு! | Village God:  Oppilatha Amman Temple in Ariyalur - Sakthi Vikatan - Vikatan

மூலவர் : ஒப்பில்லாத அம்மன்

ஊர் : அரியலூர்

மாவட்டம் : அரியலூர்

மாநிலம் : தமிழ்நாடு

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஸ்ரீ ஒப்பிலாய் அம்மன் திருக்கோயில், அரியலூரில் மேலத் தெருவில் குறிஞ்சேரி அருகே அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

அரியலூர் மாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. கோயில் இருக்கும் தெருவுக்கு ஒப்பில்லாத அம்மன் கோயில் தெரு என்றே பெயர் உள்ளது. நடந்தே சென்று விடலாம்.

எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?

வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் கோபுரம் எதுவுமே இல்லாமல் திறந்த வெளியிலேயே அரசமர நிழலில் கோவிலானது அமைக்கப்பட்டிருக்கிறது.

பெரிய பெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள்.

வேறென்ன சிறப்பு?

கருவறையில் சப்த கன்னியர்கள் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினியாகக் காட்சியளிக்கிறாள்.

கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள்.

பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக