வியாழன், 25 நவம்பர், 2021

425 நாட்கள் வரை செல்லுபடியாகும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.!

று எந்த தனியார் தொலைத்தொடர்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் தொடர்ந்து மலிவு ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியுள்ளது.

ஆனால் வேறு எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் அதன் திட்டங்களுடன் 425 நாட்கள் வேலிடிட்டியை வழங்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து இடங்களில் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும்அருமையாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கால் அழைப்பு நன்மை மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்