Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 நவம்பர், 2021

களத்தில் இறங்கும் டாடா.. மத்திய அரசு திட்டத்திற்காக புதிய பிஸ்னஸ் துவங்க முடிவு..!

டாடா மோட்டார்ஸ்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என முடிவு செய்து vehicle scrappage policy-ஐ கொண்டு வந்த நிலையில், இதற்கான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்படாமல் உள்ளது.

இந்த வாகன ஸ்கிராப் திட்டத்தின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்கிராப் வர்த்தகம் உருவாக உள்ளது. இதேபோல் பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி அடையாத அனைத்து வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இதைக் கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் முயற்சி செய்து வருகிறது.

டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்தியா முழுவதும் வாகன ஸ்கிராப் சென்டரை பிரான்சைஸ் முறையில் துவங்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். டாடா மோட்டார்ஸ்-ன் முதல் ஸ்கிராப் சென்டரை அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வர உள்ளது.

குஜராத் அரசு

டாடா மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு குஜராத் அரசுடன் இணைந்து அகமதாபாத் நகரில் புதிய வாகன ஸ்கிராப் சென்டரை-ஐ அமைக்கும் பணியைத் துவங்கியது. தற்போது இந்தியா முழுவதும் பிரான்சைஸ் முறையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

vehicle scrappage policy

இந்தியாவில் vehicle scrappage policy முழுமையாக நடைமுறைக்கும் பயன்பாட்டுக்கும் வந்தால் வருடத்திற்கு 25,000 டிரக்குகள் ஸ்கிராப் செய்யப்படும். ஆனால் இந்தியாவில் இதற்கான வசதி இன்னும் உருவாக்கப்படவில்லை. தற்போது இத்திட்டத்திற்காக ஐரோப்பிய நிறுபுனர்களுடன் கைகோர்த்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

பிரான்சைஸ் திட்டம்

மேலும் பிரான்சைஸ் திட்டத்திற்கான பணிகளும் டாடா துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டாடா மோட்டார்ஸ் - குஜராத் அரசு இணைந்து உருவாக்கிய வாகன ஸ்கிராப் சென்டரில் வருடத்திற்கு 36,000 வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்களை ஸ்கிராப் செய்யும் திறன் கொண்டு உள்ளதாக உள்ளது.

பழைய வாகனங்கள்

vehicle scrappage policy திட்டத்தின் கீழ் 15 வருடத்திற்கும் பழமையான வர்த்தக வாகனங்களும், 20 வருடங்களுக்கும் அதிகமான தனியார் வாகனங்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் இக்குறிப்பிட வருடத்தைக் கடந்த வாகனங்கள் பிட்னஸ் டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 1, 2022 முதல்

மத்திய மற்றும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து பழைய வாகனங்களையும், முறையாக ஆய்வு செய்து ஸ்கிராப் செய்யப்பட மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் ஏப்ரல் 1, 2022 முதல் இதற்கான பணிகளை அரசு அமைப்புகள் துவங்க உள்ளது.

என்ன லாபம்..?

vehicle scrappage policy திட்டத்தின் மூலம் புதிய வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க முடியும். அதேபோல் எரிபொருள் பயன்பாட்டு அளவீட்டைக் குறைக்க முடியும், இதனால் காற்றுமாசுப்பாடு குறைக்க முடியும் என்பது தான் மத்திய அரசின் முக்கியத் திட்டம். ஆனால் மறைமுகமாகப் புதிய வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக