Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஹோம் லோன் அப்ளை செய்ய போறீங்களா.. எங்கு குறைவான வட்டி.. தெரிந்து கொண்டு போங்க..!

நம்மில் பலருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது வாழ் நாள் கனவாகவே இருக்கும். ஆனால் பலரும் எதிர்கொள்ளும் முதல் சவாலே நிதி நெருக்கடி தான். ஏனெனில் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு கட்டுவது சாத்தியமான விஷயமாக இருக்காது.அப்படி நெருக்கடியை எதிர்கொள்ளும் பலருக்கும் உதவுவது ஹோம் லோன் தான். இதன் மூலம் தங்களது கனவு வீட்டினை கட்ட முடியும்.

இப்படி கடன் வாங்கி வீடு கட்டுவது என்ற நிலையில், பலரும் கடன் கிடைத்தால் போதும் என அப்போதைக்கு வாங்கி கட்டி விடுகின்றனர். ஆனால் அதனை கட்டும்போது தான் அதன் பிரச்சனைகள் என்ன என்பது தெரியும், மாதம் மாதம் எவ்வளவு வட்டி என்பதும் தெரியும்.

குறைவான வட்டி விகிதம்

ஆக கடன் வாங்கி வீடு கட்டினால் எங்கு குறைவான வட்டி கிடைக்கிறது என்பதை ஆராய வேண்டும்.

தற்போது பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் குறைந்த வட்டியில் கட்ட முடியும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ள நிலையில், இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது.

ரியல் எஸ்டேட் சலுகை

கொரோனாவால் சில காலாண்டுகளாகவே முடங்கிபோன ரியல் எஸ்டேட் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஆக இதுவும் உங்களுக்கு இது சாதகமான நேரம் உள்ளது. மொத்தத்தில் குறைந்த வட்டியில் கடன் வாங்க இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு கடனுக்கு எவ்வளவு வட்டி?
  • எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் - 6.66% - 7.60%
  • டாடா கேப்பிட்டல் - 6.7%
  • ஹெச்டிஎஃப்சி லிமிடெட் - 6.70 - 7.65%
  • பஜாஜ் பின்செர்வ் - 6.70 - 14%
  • சுந்தரம் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் - 7.85%
  • ஜிஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் - 7.90%
  • இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் - 8.65%
  • ஆதித்யா பிர்லா ஹவுஸிங் பைனான்ஸ் - 9 - 12.5%
  • ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் - 9.75 - 13%
  • சென்ட்ரல் பேங்க் ஹவுஸிங் - 9.95 - 11.15%
  • பிரமல் கேப்பிட்டல் & ஹவுஸிங் பைனான்ஸ் - 10.5%

இந்த வட்டி விகிதமானது நவம்பர் 19 நிலவரப்படி எடுக்கப்பட்டது.

எந்த வட்டி விகிதம் சிறந்தது?

இப்படி ஹோம் லோன் வாங்கும்போது பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம் நான் கடன் வாங்கும்போது Floting விகிதத்தில் வாங்கலாமா? அல்லது பிக்சட் ரேட்டில் வாங்கலாமா? எது சிறந்தது என கேட்பார்கள். பொதுவாக Floting விகிதத்தில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் குறைந்தால், உங்களுக்கு வட்டி விகிதம் குறையும். அதேசமயம் வட்டி அதிகரித்தாலும் வட்டி அதிகரிக்கும்.

1 கருத்து:

  1. பணம், முதலீடு, காப்பீடு, க்ரிப்டோகரன்ஸி, சினிமா விமர்சனம், உள்ளிட்ட உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் எதில் வேண்டுமானாலும் கட்டுரை எழுதி ரூ.30,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்கள் கட்டுரை valaithamil.com தளத்தில் வெளியிடப்பட்டால் ரூ.50 முதல் ரூ.1000 தினந்தோறும் வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு valaithamil.com/contentwriter.html என்கிற முகவரிக்குச் செல்லுங்கள்.

    மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு