Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 நவம்பர், 2021

பென்டிரைவில் வெப்சீரிஸ் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை., வாங்கியவருக்கு ஆயுள் தண்டனை: வடகொரியா உத்தரவு!

 துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த தொடர்களில் ஒன்று ஸ்க்விட் கேம் என்ற வெப் சீரிஸ். இந்த ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் ஆனது கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகம் முழுவதும் அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடகொரியாவில் ஸ்க்விட் கேம் தொடரை பென் டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை

மேலும் இந்த மரண தண்டனையானது துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்க்விட் கேம் தொடரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பென் டிரைவை வாங்கிய உயர்நிலை பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆசிய செய்திகளுக்கான தனியார் ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் மேலும் ஆறு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஸ்க்விட் கேம் தொடர்

நெட்பிளிக்ஸ் தொடரான ஸ்க்விட் கேம் தொடரை பென்டிரைவில் ஏற்றி விற்ற நபருக்கு வடகொரியா மரண தண்டனை விதித்துள்ளது. அதேபோல் ஒரு மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை ஆனது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சட்டவிரோதமாக நிகழ்ச்சியை பார்த்ததற்காக ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக எல்லை மூடப்பட்ட நிலையில் இருக்கும் போது எப்படி இந்த வெப்சீரிஸ் கடத்தி கொண்டு வரப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் வரை கைது செய்யப்பட்ட அனைவரும் இரக்கமின்றி விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கம் இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Squid Game

Squid Game தொடர் ஆனது டாங் ஹியூக் இயக்கத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தென்கொரிய படைப்பான ஸ்க்விட் கேம் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடரும் இதன் க்ளைமாக்ஸ்-ம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த தொடரை சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தண்டனை

இப்போது வந்துள்ள புதிய புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உலகில் அனைத்து மக்களும் அனைத்து திரைப்படங்களையும் மிக எளிமையாக பார்க்க முடிகிறது. குறிப்பாக மக்களின் பிரபலமான பொழுதுபோக்குகளில் ஒன்று திரைப்படம் காண்பது தான். ஆனால் வடகொரியாவில் திரைப்படம் பார்ப்பதற்கு கடுமையான தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக நாடுகளின் மத்தியில் நன்பெயரை வாங்கி கொண்டு வந்த வட கொரியாவும், அந்நாட்டின் சர்வாதிகாரி என்ற வகையில் கிம்மும்
மீண்டும் அதன் பழைய போக்கிற்கு திரும்பி உள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.

அரசுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு

வெளிநாடுகளின் தொடர்பு இல்லாமலேயே வாழும் வடகொரியா மக்கள் அவ்வப்போது சீனா எல்லை வழியே கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற வெளிநாட்டு திரைப்படங்களை காண்பதால் மக்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து அரசுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறது கிம் ஜாங் உன் அரசு. எனவேதான் வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளது வடகொரியா.

500 பேர் முன்னிலையில் மரண தண்டனை

இதேபோல் முன்னதாக வெளிவந்த தகவலனில்படி, தென்கொரிய திரைப்படங்கள் அடங்கிய பென்டிரைவ் விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு இளைஞருக்கு 500 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருவோருக்கு மரண தண்டனை என்றும், வெளிநாட்டு படங்களை காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் சட்டம் கொண்டுவந்தது கிம் ஜாங் உன் அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக